குன்னூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த டிப்பர் லாரி! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர் ..
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய டிப்பர் லாரி, மீட்பு முயற்சியின்போது அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். குன்னூரில் இருந்து சிம்ஸ் பூங்கா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கிரேசில் அருகே எம்-சாண்ட் மற்றும் கற்களை ஏற்றிச் சென்ற லாரியின் பின்பக்க டயர்கள் சாலையோரப் பள்ளத்தில் சிக்கிக்கொண்டன. இதையடுத்து, ஓட்டுநர் ரவி லாரியை நிறுத்திவிட்டு, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மீட்க முயன்றார்.

அப்போது லேசான மழையால் லாரியில் மழைநீர் தேங்கி, அதன் பாரம் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் லாரி மெதுவாக அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரி சிக்கியிருந்த பகுதியில் இருந்த மதில் சுவர் வலுவற்றதாக இருந்ததும் விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. விபத்து ஏற்படுவதற்கு முன்பே ஓட்டுநர் ரவி லாரியிலிருந்து இறங்கியதால் உயிர் தப்பினார்.