கோவை மொபைல் கடையில் நூதனத் திருட்டு! 4 செல்போன்கள், ரூ.15,000 அபேஸ் – சிசிடிவி காட்சி வைரல்
கோவை வடவள்ளியில் வாடிக்கையாளர் போல வந்த மர்ம நபர், மொபைல் கடையில் 4 புதிய செல்போன்கள் மற்றும் ரூ.15,000 ரொக்கத்தைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.30,000 மதிப்பிலான இரண்டு செல்போன்களை வாங்குவதாகக் கூறிய அந்த நபர், பின்னர் ஏடிஎம் கார்டில் பணம் இருப்பதாகவும், அதை எடுத்துவருமாறும் கடை ஊழியரிடம் தெரிவித்துள்ளார்.
கோவை வடவள்ளியில் வாடிக்கையாளர் போல வந்த மர்ம நபர், மொபைல் கடையில் 4 புதிய செல்போன்கள் மற்றும் ரூ.15,000 ரொக்கத்தைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.30,000 மதிப்பிலான இரண்டு செல்போன்களை வாங்குவதாகக் கூறிய அந்த நபர், பின்னர் ஏடிஎம் கார்டில் பணம் இருப்பதாகவும், அதை எடுத்துவருமாறும் கடை ஊழியரிடம் தெரிவித்துள்ளார். அவரது பேச்சை நம்பி ஊழியர் வெளியே சென்றதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், கடையில் இருந்த 4 செல்போன்கள் மற்றும் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.15,000-ஐ திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
திரும்பி வந்த ஊழியர் பொருட்கள் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது திருட்டு அம்பலமானது. தற்போது இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
