மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த அமைச்சர் – நெகிழ்ச்சி சம்பவம்!
அம்மாப்பேட்டை மணல்மேடு TMS பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்வதில்லை எனப் புகார் எழுந்தது. இதையடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து பேருந்துகள் முறையாக நின்று செல்கின்றனவா எனக் கண்காணித்த அவர், அனைத்து பேருந்துகளும் அங்கு நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.

அப்போது, வாழப்பாடி மற்றும் ஏத்தாப்பூர் செல்லும் பேருந்துக்காக நீண்ட நேரமாகக் காத்திருந்த மூதாட்டியைக் கண்ட அமைச்சர், அவருடன் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து காத்திருந்தார். மூதாட்டி செல்ல வேண்டிய பேருந்து வந்ததும், அவரைப் பேருந்தில் ஏற்றி வழியனுப்பி வைத்தார். பேருந்து நிறுத்தப் பிரச்சினையை ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர், மூதாட்டிக்காகவும் காத்திருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.