Home Loan வாங்க போறீங்களா?.. இவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்.. லட்சங்களை சேமிக்கலாம்!
Tips For Saving Huge Amount In Home Loan Repayment | பலரும் தங்களது சொந்த வீடு கனவை நனவாக்க வங்கியில் வீட்டு கடன் வாங்குகின்றனர். அவ்வாறு வீட்டுக் கடன் வாங்க விரும்பும் நபர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன.
பெரும்பாலான இந்தியர்களுக்கு இருக்கும் பொதுவான கனவு என்றால் அது சொந்த வீடு தான். எப்படியாவது வாழ்நாள் முழுவதும் உழைத்தாவது, ஒரு சொந்த வீடு வாங்கவோ அல்லது கட்டவோ இந்தியர்கள் விரும்புகின்றனர். முன்பு பணத்தை சிறுக சிறுக சேமித்து அதனை வைத்து வீடு கட்டி வந்த நிலையில், தற்போது மேலும் சுலபமாக மாறிவிட்டது. அதாவது, வங்கியில் வீட்டு கடனை (Home Loan) பெற்று மிக சுலபமாக வீடு கட்ட முடியும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலரும் தங்களது சொந்த வீடு கனவை நனவாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், நீங்கள் வீடு கட்ட வங்கியில் கடன் வாங்க போகிறீர்கள் என்றால் இந்த சில விஷயங்கள் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. இவற்றை தெரிந்துக்கொள்வதன் மூலம் நீங்கள் வங்கி கடனை திருப்பி செலுத்தும்போது பணத்தை மிச்சம் செய்ய முடியும்.
வீட்டு கடன் வாங்குவதற்கு முன்னதாக கவனிக்க வேண்டியவை
வீட்டு கடன் வாங்குவதற்கு முன்னதாக சில முக்கிய விஷயங்கள் குறித்து கவனிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.




கிரெடிட் ஸ்கோர்
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உங்களுக்கு எவ்வளவு வட்டியில் கடன் வழங்கலாம் என்பதை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக கிரெடிட் ஸ்கோர் உள்ளது. அதாவது ஒருவர் அதிகமாக கிரெடிட் ஸ்கோர் வைத்திருந்தால் அவர் இதற்கு முன்னதாக வாங்கிய கடன்கள் அனைத்தையும் முறையாக செலுத்தியுள்ளார் என்று அர்த்தம். இதுவே அவர், குறைவாக கிரெடிட் ஸ்கோர் வைத்திருந்தால் முறையாக திருப்பி செலுத்தவில்லை என அர்த்தம். எனவே குறைவாக ஸ்கோர் கொண்டவர்களுக்கு அதிக வட்டியிலும், அதிக ஸ்கோர் கொண்டவர்களுக்கு குறைந்த வட்டியிலும் கடன் கிடைக்கும்.
இதையும் படிங்க : Gold Price : 2026 இறுதிக்குள் ரூ.20,000-த்தை தொடுமா ஒரு கிராம் தங்கம்?.. நிலவரம் என்ன?
டவுன் பேமெண்ட்
கடன் வாங்க நினைக்கும் நபர்கள் அதிகபட்ச தொகையை வங்கியிடம் இருந்து பெற நினைக்கின்றனர். ஆனால், அது முற்றிலும் தவறு. எந்த அளவு டவுன் பேமெண்ட் செலுத்துகிறோமோ அந்த அளவுக்கு கடன் தேவையை குறைக்க வேண்டும். இது நீங்கள் லட்சக்கணக்கில் பணத்தை திருப்பி செலுத்துவதை தவிர்க்க உதவும்.
இதையும் படிங்க : புதியதாக வேலைக்கு செல்லும் நபர்களுக்கு ரூ.15,000.. அரசின் இந்த அட்டகாசமான திட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா?
ஒப்பிட்டு பார்க்க வேண்டும்
வீடு வாங்கும்போது எப்படி வெவ்வேறு இடங்களை ஒப்பிட்டு பார்க்கிறோமோ அதேபோல, கடன் பெறுவதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் விசாரிக்க வேண்டும். கடன் விகிதம், சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.