AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : 2026 இறுதிக்குள் ரூ.20,000-த்தை தொடுமா ஒரு கிராம் தங்கம்?.. நிலவரம் என்ன?

Will Gold Price Hit 20000 Rupees In End Of 2026 | கடந்த ஆண்டுகளில் தங்கம் தொடர் விலை உயர்வை சந்தித்த நிலையில், 2026 இறுதிக்குள் தங்கம் விலை ரூ.20,000-த்தை தாண்டும் என கூறப்பட்டது. இந்த நிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் தங்கம் அத்தகைய மாற்றத்தை எதிர்க்கொள்ளுமா என்பது குறித்து பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Oct 2026 22:24 PM IST
கடந்த ஆண்டுகளில் தங்கம் தொடர் விலை உயர்வை சந்தித்து முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வெறும் 5 ஆண்டுகளில் ரூ.30,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக தங்கம் விலை உயர்ந்தது. இதன் காரணமாக 2026 ஆம் ஆண்டும் தங்கம் விலை உயர்வை சந்திக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

1 / 5
அதாவது, 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.20,000-த்தை தாண்டும் என கூறப்பட்டது. அதனை நம்பி ஏராளமான முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்தனர். ஆனால், இந்தியாவின் பெரும்பாலான நகரங்களின் தற்போதைய நிலவரப்படி தங்கம் ரூ.13,500 முதல் ரூ.13,700 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

2 / 5
இதன் காரணமாக நல்ல லாபத்தை எதிர்ப்பார்த்து தங்கத்தில் முதலீடு செய்த நபர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 2026 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், அதற்குள்ளாக தங்கம் விலை உயருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. காரணம், தங்கம் ரூ.20,000-த்தை தொட தற்போதைய விலையில் இருந்து 48 சதவீதம் உயர்வை சந்திக்க வேண்டும்.

3 / 5
உலக அளவில் அதிகம் தங்கம் நுகரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. தற்போது இந்தியாவில் பண்டிகை மற்றும் திருமண சீசன் தொடங்கியுள்ளதன் காரணமாக தங்கத்தின் தேவை இந்திய அளவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது சர்வதேச சந்தையை விடவும், இந்தியாவில் தங்கத்தின் விலை சற்று உயர்வாக இருக்கும். அது தற்காலிகமானது மட்டுமே.

4 / 5
உலக மத்திய வங்கிகளின் தொடர் கொள்முதல், புவிசார் அரசியல் பதற்றம், டாலர் பலவீனம் அடைவது மற்றும் பணவீக்கம் உள்ளிட்டவை தான் தங்கம் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன. என்னதான், இந்த காரணிகளால் தங்கம் விலை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும், 48 சதவீதம் விலை உயர்வது மிகவும் கடினமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us