நெல்லை- தென்காசியில் மின் தடை அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா.. முழு விவரம் இதோ!
Tirunelveli - Tenkasi Power Cut : திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளை மறுநாள் ஒரு சில இடங்களில் மின் தடை செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், எந்தெந்த பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது என்ற விவரத்தை பார்க்கலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களிலும், தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூர், அச்சன்புதூர் துணைமின் நிலையங்களிலும் நாளை மறுநாள் வியாழக்கிழமை ( அக்டோபர் 22- ஆம் தேதி) மின்தடை செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வள்ளியூர் மின்கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், திசையன்விளை துணை மின் நிலையத்தில் வரும் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. இதில், திசையன்விளை, மருதநாட்சிவிளை, முருகேசபுரம், இடையன்குடி, நாடார் அச்சம்பாடு, மடத்தச்சம்பாடு, முதுமொத்தான்மொழி, ஆனைகுடி ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
கல்லிடைக்குறிச்சு கோட்டத்தில் மின் நிறுத்தம்
இதேபோல, கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்ட செய்தி குறிப்பில், கல்லிடைக்குறிச்சி கோட்டம், கரிசல்பட்டி மற்றும் சேரன்மகாதேவி துணை மின் நிலையங்களில் வரும் வியாழக்கிழமை ( அக்டோபர் 22- ஆம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கரிசல்பட்டி, மணிமுத்தான்குளம், கோவிந்த பேரி, பிள்ளை குளம், புலவன் குடியிருப்பு, மீனவன் குளம், தெய்வநாயகபேரி, கங்கணாங்குளம், பட்டன் காடு, சடையமான்குளம், இடையான்குளம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
மேலும் படிக்க: ரூ.100 கோடி மெத்தபெட்டமைன் கடத்தல் கும்பலுடன் தொடர்பு.. இரு காவலர்கள் பணியிட மாற்றம்.. நாகை காவல்துறையில் பரபரப்பு!




தென்காசி கோட்டத்தில் மின் தடை
இதேபோல, சிங்கிகுளம், காடுவெட்டி வெங்கட்ரங்கபுரம், சேரன்மகாதேவி, கோபால சமுத்திரம், வாணியங்குளம், பத்தமடை, சுப்பிரமணியபுரம், மேலச் செவல், மலையடி, கரி சூழ்ந்த மங்கலம், மேல்கரை, கேசவ சமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. இதேபோல, தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீ வனஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அச்சன்புதூர் மற்றும் கீழப்பாவூர் துணைமின் நிலையங்களில் வரும் வியாழக்கிழமை ( அக்டோபர் 22- ஆம் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
பாவூர்சத்திரம்- அச்சன்புதூர் பகுதிகளில் மின் தடை
அதன்படி, பாவூர்சத்திரம், மேலப்பாவூர், குறும்பலாப்பேரி, கீழப்பாவூர், ஆவுடையானூர், குலசேகரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளது. இதே போல, நாட்டார் பட்டி, சின்ன நாடானூர், செட்டியூர், திப்பனம்பட்டி, பெத்தநாடார்பட்டி, செல்ல தாயார்புரம், கரிசலூர், அடைக்கலப்பட்டினம் வடக்கு, மகிழ்வண்ணநாதபுரம், சாலைப்புதூர் ஆகிய பகுதிகளிலும், அச்சன்புதூர், வாவா நகரம், வடகரை, காசி தர்மம், கரிசல் குடியிருப்பு, பண்பொழி, மேக்கரை ஆகிய ஊர்களிலும் மின்தடை செய்யப்பட உள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்தடுத்து சிக்கும் போதைப்பொருள்கள்.. திருநெல்வேலியில் 600 மாத்திரைகள் பறிமுதல்.. 4 பேரை மடக்கி பிடித்த போலீஸ்!