AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காவல் நிலையத்தில் பெண் எஸ்.ஐ. கண்ணத்தில் பளார்… தவெக நிர்வாகி உள்பட இருவர் அதிரடி கைது.. திருவண்ணாமலையில் பரபர சம்பவம்!

Tiruvannamalai TVK Functionary Arrested : திருவண்ணாமலையில் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளரை தாக்கி ரகளையில் ஈடுபட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி உள்பட இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காவல் நிலையத்தில் பெண் எஸ்.ஐ. கண்ணத்தில் பளார்… தவெக நிர்வாகி உள்பட இருவர் அதிரடி கைது.. திருவண்ணாமலையில் பரபர சம்பவம்!
கைதான தவெக நிர்வாகி உள்பட இருவர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 20 Oct 2026 17:47 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியும், முன்னாள் ராணுவ வீரருமான வாசு ( 41 வயது) மது போதையில் அந்த வழியாக சென்ற பொது மக்களிடம் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டு வந்தார். இவருடன் அவரது நண்பர் குமரகுரு ( 41 வயது) என்பவரும் மது போதையில் ரகளையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்ணமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அதிக மது போதையில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் வாசு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் கவிதாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

காவல் நிலையத்தில் பெண் எஸ்.ஐ.மீது தாக்குதல்

அப்போது, பணியில் இருந்த சக போலீசார் முன்னாள் ராணுவ வீரரை அமைதி படுத்த முயற்சித்தனர். ஆனால், அதிக மது போதையில் இருந்த வாசு காவல் உதவி ஆய்வாளர் கவிதா மீது திடீரென தாக்குதல் நடத்தினார். வாசுவுடன் சேர்ந்து அவரது நண்பர் குமரகுருவும் எஸ். ஐ. மீது திடீரென தாக்க தொடங்கினார். இதை தொடர்ந்து, சக போலீசார் இருவரையும் பிடித்து கைதி அறைக்குள் அடைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் வாசு மீதும் அவரது நண்பர் குமரகுரு மீதும் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

மேலும் படிக்க: தமிழகத்தை உலுக்கும் மெத்தபெட்டமைன் விவகாரம்.. சென்னையில் சிக்கிய 3 பேர்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

தவெக நிர்வாகி உள்பட இருவர் சிறையில் அடைப்பு

தொடர்ந்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். அவர்கள் இருவருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. மது போதையில் பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரரும், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியுமான வாசு, அவர்கள் நண்பர் குமரகுரு ஆகியோர் காவல் நிலையத்தில் பெண் எஸ்ஐ மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: சென்னை விமான நிலையத்தில் வேலை… ரூ.23 லட்சத்தை சுருட்டிய விமான நிலைய முன்னாள் அதிகாரி.. போலீசார் எடுத்த நடவடிக்கை!

Follow Us