தமிழகத்தை உலுக்கும் மெத்தபெட்டமைன் விவகாரம்.. சென்னையில் சிக்கிய 3 பேர்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்!
Methamphetamine seized in Chennai : சென்னையில் மெத்தபெட்டமைன் விற்றதாக கல்லூரி மாணவி உள்பட 3 பே ரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் கீழ்ப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
சென்னை மாவட்டம், கீழ்பாக்கம் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை அருகே போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் இன்று செவ்வாய்க்கிழமை ( அக்டோபர் 20- ஆம் தேதி) சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இரு பெண்கள் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், அவர்களிடம் 50 கிராம் மெத்தபெட்டமைன் உயர் ரக போதை பொருள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மெத்தபெட்டமைன் விற்ற 3 பேர்
இந்த தீவிர விசாரணையில், இவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்கள தமிழகத்திற்கு கடத்தி வந்து உபயோகப்படுத்தியதும், பிறருக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அத்துடன், இளம் பெண்களை முதலில் போதைக்கு அடிமையாக்கி, பின்னர் அவர்களை போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் ஏஜெண்டுகளாக பயன்படுத்தி வந்த அதிர்ச்சி பின்னணியும் வெளியானது. இதில், ஒரு பெண் கல்லூரியில் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சிவகங்கையில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை.. 24 மணி நேரத்தில் 3 பேர் கைது.. 8 பேருக்கு தனிப்படை வலைவீச்சி!




மெத்தபெட்டமைன் வைத்திருந்த 3 பேர் கைது
இதைத் தொடர்ந்து, அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சட்டவிரோதமாக போதை பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஒன்றிய செயலாளர் பூபாலன் என்பவர் மெத்தபெட்டமைன் போதை பொருளை இலங்கைக்கு கடத்த முயற்சித்ததாக புகார் எழுந்தது.
தமிழகத்தை உலுக்கும் மெத்தபெட்டமைன் விவகாரம்
அந்த புகாரின் அடிப்படையில், அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டதில், ரூ. 100 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இந்த விவகாரம் தமிழகத்தையை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 50 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளுடன் இரு பெண்கள், ஒரு ஆண் ஆகிய மூன்று பேர் கைதான சம்பவம் அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: தவெகவில் பதவி ஆசை காட்டி பலாத்காரம்.. கருவை கலைத்து கொலை மிரட்டல்.. அரக்கோணம் ஒன்றிய செயலர் மீது புகார்!