தவெக-வுக்கு குவிந்த ரூ.13.3 கோடி நன்கொடை.. 99% நிதியை அள்ளி கொடுத்த 2 அமைச்சர்கள்.. யார் அந்த கொடை வள்ளல்கள்!
TVK Rs.13.3 Crore Donation : தமிழக வெற்றிக் கழகத்துக்கு கிடைத்த ரூ. 13.3 கோடி நன்கொடயில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோர் 99 சதவீதம் நன்கொடை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முழு விவரத்தை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோரிடம் இருந்து நன்கொடை பெற்று வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் செயல்படும் தமிழக வெற்றி கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து நன்கொடை பெற்றுள்ளது. அந்த வகையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் கடந்த 2025- 2026 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதி ஆதாரத்தில் ரூ. 13.30 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நன்கொடையில், 99 சதவீதம் தவெகவின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளரும், பொதுப் பணித் துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா மற்றும் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் ஆகியோர் கொடுத்துள்ளனர்.
அமைச்சர் ஆதவர் அர்ஜூனா ரூ. 8.2 கோடி- ரஞ்சித்குமார் ரூ. 5 கோடி
இதில், ரூ.8.2 கொடியை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், ரூ.5 கோடியை வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமாரும் வழங்கி உள்ளனர். இதை தவிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் லயன்ஸ் டவுனில் செயல்பட்டு வரும் ஸ்னோ ஷோ நிறுவனத்திடம் ரூ. 5 லட்சத்துக்கான நன்கொடையை கேட்பு வரைவோலை மூலமாக தமிழக வெற்றி கழகம் பெற்றுள்ளது. அத்துடன், ஸ்னோ ஷோ நிறுவனம் பதிவு செய்யப்பட்ட அதே முகவரியில் ஸ்னோ ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனமும் ரூ. 5 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளது.
மேலும் படிக்க: தவெக அரசை சீர்குலைக்க சதி… குண்டை தூக்கி போட்ட வைகோ.. அரசியலில் அடுத்த பரபரப்பு!




தவெகவுக்கு கிடைத்த நன்கொடையில் 99 சதவீதம்
மொத்தத்தில் தமிழக வெற்றி கழகம் பெற்ற ரூ. 13.3 கோடி நன்கொடையில் ரூ. 13.2 கோடியை தவெகவின் முக்கிய தலைவரும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா மற்றும் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் ஆகிய இருவருமே வழங்கி உள்ள என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் உள்ள கட்சிகளில் கொல்கத்தாவில் பதிவு செய்யப்பட்ட டைகர் அசோசியேட்ஸ் லாட்டரி நிறுவனத்திடம் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் ரூ. 125 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது.
லாட்டரி நிறுவனத்திடம் திமுக-அதிமுக பெற்ற ரூ. 260 கோடி
இதே போல, அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகமும் அதே நிறுவனத்திடம் இருந்து ரூ. 135 கோடி நன்கொடை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், ரூ. 260 கோடியை திமுக, அதிமுக பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் சுபயன் நாகராஜனும் லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினுன் மற்றொரு நிறுவனத்தில் கூட்டாளிகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வெள்ள தடுப்பு ஆய்வறிக்கையில் உள்ள சூட்சமம்.. திமுக அரசு செய்யாததை தவெக அரசு செய்ய வேண்டும்.. பெ. சண்முகம்!