AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆட்டோ.. அடுத்தடுத்து பிரிந்த இரு சிறுமிகள் உயிர்.. திருவள்ளூரில் சோகம்!

Thiruvallur Accident Two Dies : திருவள்ளூரில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு சிறுமிகள் பலத்த காயமடைந்து உயிரிழந்தது. மேலும், ஆட்டோ ஓட்டுநர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆட்டோ.. அடுத்தடுத்து பிரிந்த இரு சிறுமிகள் உயிர்.. திருவள்ளூரில் சோகம்!
ஆட்டோ விபத்தில் இரு சிறுமிகள் பலி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 19 Oct 2026 17:29 PM IST

விழுப்புரம் மாவட்டம், குலத்தாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் ( 28 வயது). ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர், தனது குடும்பத்துடன் புழல் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், வேல்முருகன் தனது உறவினரான ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் ராஜா என்பவரது குடும்பத்தினருடன் சேர்ந்து அவருக்கு சொந்தமான 2 ஆட்டோக்களில் சிறுவாபுரியில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு சென்று விட்டு தரிசனம் முடித்து மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, சோழவரம் அருகே உள்ள ஆத்தூர் மேம்பாலம் அருகே அவர்களது ஆட்டோ வந்தபோது, திடீரென, கார்த்திக் ராஜா போட்டிய ஆட்டோ நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த சிறுமிகள்- ஓட்டுநர்

இந்த விபத்தில் ஆட்டோவின் பின்புறம் அமர்ந்திருந்த வேல்முருகனின் மகள் ஸ்ரீனிகா, கார்த்திக் ராஜாவின் மகள் ஹர்ஷினி, மகன் கவினேஷ், கார்த்திக் ராஜா ஆகிய 4 பேர் பலத்த ரத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். உடனே, பின்புறம் ஆட்டோவில் வந்த வேல்முருகன் மற்றும் அந்த வழியாக சென்ற பிற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக நல்லூர் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: சிவகங்கையில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை.. 24 மணி நேரத்தில் 3 பேர் கைது.. 8 பேருக்கு தனிப்படை வலைவீச்சி!

தீவிர சிகிச்சை பிரிவில் அடுத்தடுத்து பிரிந்து சிறுமிகள் உயிர்

அங்கு, 3 சிறுமி, சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஆபத்தான நிலையில் இருப்பதாக எப்படி தீவிர சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்படி, எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுமி ஸ்ரீனிகா, ஹர்ஷினி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓட்டுநருக்கு சிகிச்சை

மேலும், விபத்தில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் ராஜா, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக கார்த்திக் ராஜா உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: நடத்தையில் சந்தேகம்.. மனைவியின் தலையை கொடுவாளால் பதம் பார்த்த கணவன்.. ஓசூரில் பரபர சம்பவம்!

Follow Us