AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வெள்ள தடுப்பு ஆய்வறிக்கையில் உள்ள சூட்சமம்.. திமுக அரசு செய்யாததை தவெக அரசு செய்ய வேண்டும்.. பெ. சண்முகம்!

Shanmugam About Thirupugazh Committee Report : திமுக ஆட்சிக் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருப்புகழ் குழு ஆய்வறிக்கையை தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தி உள்ளார் .

வெள்ள தடுப்பு ஆய்வறிக்கையில் உள்ள சூட்சமம்.. திமுக அரசு செய்யாததை தவெக அரசு செய்ய வேண்டும்.. பெ. சண்முகம்!
முதல்வர் விஜய்- சண்முகம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 19 Oct 2026 15:39 PM IST

தமிழகத்தில் கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலத்தில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக திருப்புகழ் குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில், அந்த அறிக்கையை தமிழக வெற்றி கழக ஆட்சியில் வெளியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் போது, ஏற்படும் வெள்ள தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பாக தீவிரமாக விவாதிப்பதுமாக ஒவ்வொரு ஆண்டும் கடந்து கொண்டிருக்கிறது. கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலத்தில் சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக திருப்புகழ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது.

திமுக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கை

அந்த குழு சென்னையில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டிருந்த நிலையில், அந்த அறிக்கை தற்போது வரை வெளியிடப்படவில்லை. இந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தது. இடைக்கால அறிக்கைகள் உட்பட மூன்றுக்கும் மேற்பட்ட அறிக்கைகளை இந்த குழு அரசிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. இதில் பல்வேறு கார்ப்பரேட் பெரிய நிறுவனங்கள் மற்றும் வசதி படைத்தோரின் ஆக்கிரமப்புகளை அகற்றுவது முக்கியமானது என்று சொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: SIR விவகாரம்: “டெல்லியில் மட்டும் பேசிவிட்டு தமிழகத்தில் பேச தயங்குவது ஏன்?”.. காங்கிரசுக்கு கிருஷ்ணசாமி சரமாரி கேள்வி!!

பெறு நிறுவனங்கள்- வசதி படைத்தோரின் ஆக்கிரமிப்புகள்

இதன் காரணமாக வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட திருப்புகழ் ஆய்வு அறிக்கை வெளியிடப்படாமல் தடை செய்யப்பட்டிருக்கிறதோ என்ற கேள்வி மற்றும் சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் வெளியிடப்படாத அந்த அறிக்கையை தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு தனது ஆட்சி காலத்திலாவது வெளியிடப்பட வேண்டும். பொது மக்களின் வரிப்பணத்தை செலவழித்து நிபுணர்கள் தங்களது உழைப்பு மற்றும் அறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு என்ன தடை இருக்க முடியும்.

திமுக அரசு செய்யாததை தவெக அரசு செய்திட வேண்டும்

என்ன தடை இருந்தாலும் அதனை தாண்டி திருப்புகழ் குழுவின் அறிக்கை பொது மக்களுக்காக வெளியிடப்பட வேண்டும். எனவே, தமிழக அரசு உடனடியாக திருப்புகழ் குழு தயாரித்த அறிக்கையை வெளியிடுவதுடன், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசர மற்றும் அவசியமான தேவை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: “உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்”.. ஊழலற்ற நிர்வாகமே எங்கள் இலக்கு.. அண்ணாமலை!!

Follow Us