AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செவிலியர் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்.. போலீசிடம் சிக்கிய சந்தேக நபர்.. வெளியான புதிய தகவல்கள்!!

Twist in Nurse Murder Case: திருப்பூர் செவிலியர் உத்திரா கொலை வழக்கில் பெரும் திருப்பமாக ஒருவரைப் பிடித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்து உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செவிலியர் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்.. போலீசிடம் சிக்கிய சந்தேக நபர்.. வெளியான புதிய தகவல்கள்!!
கொலையான செவிலியர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Oct 2026 12:21 PM IST

திருப்பூர், அக்.19: திருப்பூர் மாவட்டம் பெருந்துறை அருகே தனியார் மருத்துவமனை செவிலியர் கொலை செய்யப்பட்டு நிர்வாணக் கோலத்தில் மீட்கப்பட்ட வழக்கில், காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் தற்போது ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் திருப்பூர் பகுதியில் தங்கிப் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமான செவிலியர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செவிலியர் அணிந்திருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதுடன், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, காணாமல் போனபோது உடனடியாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்து அவரது உறவினர்கள் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனத் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: “திமுக தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும்; மக்களின் தீர்ப்பைக் கொச்சைப்படுத்தக் கூடாது!”.. துரை வைகோ

காணாமல் போன செவிலியர் சடலமாக மீட்பு:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பூங்குளம் பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ரஞ்சித் குமார், தனது மனைவி உத்திராவுடன் திருப்பூர் மாவட்டம் பள்ளகுண்டன்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். செவிலியர் படிப்பு முடித்த உத்திரா, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 3-ஆம் தேதி முதல் செவிலியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி வழக்கம்போல் பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை; அவர் மாயமானது குறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் ஊத்துக்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்தச் சூழலில்தான், கடந்த 17-ஆம் தேதி மாலையில் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மரத்தின் அடியில் உத்திராவின் சடலம் நிர்வாணக் கோலத்தில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

உடன் பணியாற்றும் நபர் மீது சந்தேகம்:

செவிலியரின் உடல் நிர்வாணக் கோலத்தில் மீட்கப்பட்டிருப்பதாலும், அவர் அணிந்திருந்த நான்கு சவரன் தங்கம் மாயமாகியிருப்பதாலும், அவரை யாரேனும் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பெருந்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதன் ஒரு பகுதியாக, அதே தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் சரவணன் என்பவரைப் பிடித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகைக் கொள்ளைக்காக இந்தச் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா என்பது குறித்து அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: மனைவியுடன் உல்லாசம்.. கையும் களவுமாக சிக்கிய சென்னை தவெக பிரமுகர்.. ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்!

உறவினர்களின் தொடர் போராட்டம்:

உத்திரா கடந்த 14-ஆம் தேதி மாயமான போதே உடனடியாக ஊத்துக்குடி காவல் நிலையத்திலும், சிங்கப்படை அதிரடிப் பிரிவினரிடமும் புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் காவல்துறையினர் உரிய முறையில் தேடுதல் வேட்டையையோ அல்லது தீவிர விசாரணையையோ மேற்கொள்ளவில்லை என்றும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். காவல்துறையினர் முன்கூட்டியே தீவிரமாகச் செயல்பட்டிருந்தால் செவிலியரை உயிரோடு மீட்டிருக்கலாம் என்று வேதனை தெரிவித்துள்ள உறவினர்கள், கடமையைத் தவறவிட்ட காவல்துறையைக் கண்டித்து உடலைப் பெற மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us