AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காணாமல் போன நர்ஸ்.. அழுகிய நிலையில், காட்டுக்குள் சடலமாக மீட்பு.. பகீர் சம்பவம்!

Tirupur Nurse Found Murdered in Forest | திருப்பூரில் வேலைக்கு சென்ற நர்ஸ் திடீரென காணாமல் போன நிலையில், அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த பெண் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன நர்ஸ்.. அழுகிய நிலையில், காட்டுக்குள் சடலமாக மீட்பு.. பகீர் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Oct 2026 07:44 AM IST

திருப்பூர், அக்டோபர் 19 : திருப்பூரில் (Tirupur) பெண் நர்ஸ் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் காட்டுப்பகுதிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த பயங்கர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண் நர்ஸ் கடத்திச் சென்று கொடூர கொலை

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். 27 வயதாகும் இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் தனது உறவுக்கார பெண்ணான உத்திரா என்ற 26 வயது பெண்ணை ஒரு ஆண்டுக்கு முன்னதாக திருமணம் செய்துக்கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இருவரும் திருப்பூர் மாவட்டம், பல்லக்கவுண்டம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க : மதுரை – குருவாயூர் ரயிலில் விஸ்டாடோம் பெட்டி: இயற்கையை ரசித்தபடி பயணிக்கலாம்!

உத்திரா அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த நிலையில், அவரது கணவர் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அட்கோபர் 14, 2026 அன்று வழக்கம் போல தனது மனைவியை மருத்துவமனையில் வேலைக்கு விட்டுவிட்டு, ரஞ்சித் தானும் பணிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், இரவு மனைவியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து காணாமல் போன உத்திரா

அப்போது உத்திரா ஏற்கனவே வீட்டிற்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர். அதன் காரணமாக ரஞ்சித் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கும் உத்திரா இல்லாத நிலையில், பல்வேறு இடங்களில் அவர் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் அவர்  உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : ரெட் அலர்ட் எச்சரிக்கை – பேரிடர் மீட்பு குழு சென்னை வருகை – முதல்வர் விஜய் நேரில் ஆய்வு

இந்த நிலையில் தான், ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள காட்டுக்குள் உத்திராவின் உடல் அழுகிய நிலையில் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us