AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரெட் அலர்ட் எச்சரிக்கை – பேரிடர் மீட்பு குழு சென்னை வருகை – முதல்வர் விஜய் நேரில் ஆய்வு

CM Vijay Reviews Northeast Monsoon : சென்னைக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில்  முதல்வர் விஜய் வடகிழக்கு பருவ மழை (Northeast Monsoon) மழைக்காக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ரிப்பன் மாளிகையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது அமைச்சர்கள் உடனிருந்தனர்.

ரெட் அலர்ட் எச்சரிக்கை – பேரிடர் மீட்பு குழு சென்னை வருகை  – முதல்வர் விஜய் நேரில் ஆய்வு
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Oct 2026 17:05 PM IST

சென்னை, அக்டோபர் 18 : அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில்  முதல்வர் விஜய் வடகிழக்கு பருவ மழை (Northeast Monsoon) மழைக்காக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ரிப்பன் மாளிகையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை சென்னைக்கு விரைந்தது வந்துள்ளனர். குறிப்பாக அரக்கோணத்தில் இருந்து 90 வீரர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். வேளச்சேரியில் ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ள நிலையில் மேலும் 3 குழுக்கள் வருகை தந்துள்ளன. சென்னைக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் வேளச்சேரியில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக படகுகள், உயிர்காக்கும் உபகரணங்களுடன் 30 பேர் கொண்ட குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

இதையும் படிக்க : 200-க்கும் மேற்பட்ட கேள்விகள்.. கண்ணீர் விட்டு அழுத ஜெம் வீரமணி? விசாரணையில் வெளியான தகவல்கள்!

முதல்வர் விஜய் நேரில் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரவு முழுவதும் கொட்டிய மழை

சென்னையில் அக்டோபர் 17, 2026 நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இடைவிடாமல் பெய்த மழையால், நகரின் முக்கியச் சாலைகளிலும், தாழ்வான குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு உள்ளாயினர். தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, வரும் நாள்களிலும் மழை தொடர வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழு சென்னைக்கு வந்துள்ளனர். வேளச்சேரி சேவா தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்கியுள்ள என்.டி.ஆர்.எஃப். வீரர்கள், மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் பொதுமக்கள் சிக்கிக்கொண்டால், உடனடியாகச் சென்று அவர்களைப் பாதுகாப்பாக மீட்கும் வகையில் தயாராக உள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக, சிறிய படகுகள், மிதவைகள், உயிர்காக்கும் கவசங்கள் உள்ளிட்ட உபகரணங்களை மீட்புக் குழுவினர் கொண்டு வந்துள்ளனர். மீட்புப் பணியின்போது வழியில் விழுந்து கிடக்கும் மரங்கள், கட்டைகளை அகற்றுவதற்கான வெட்டு இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டுகளில், கனமழையின்போது வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட தென்சென்னைப் பகுதிகள் கடுமையான வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. தாழ்வான இப்பகுதிகளில் மழைநீர் அதிக அளவில் தேங்குவது வழக்கம். இதைக் கருத்தில் கொண்டே, வேளச்சேரியை மையமாகக் கொண்டு மீட்புக் குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : “வாய் துடுக்காக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” – ஆர்.எஸ். பாரதியை சாடிய சண்முகம்!

உதவி எண்கள் வெளியீடு

மழைநீர் தேங்கும் பகுதிகளைக் கண்காணிப்பது, தேங்கிய நீரை விரைவாக அகற்றுவது, வெள்ளப் பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் நகர் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை தொடர்பான புகார்களுக்கு, சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணைப் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்.

Follow Us