சென்னையில் மேக வெடிப்பு.. கொட்டித்தீர்த்த மழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை! இன்றும் மழை இருக்குமா?
Cloud Burst In Chennai: சென்னையில் பெய்த கனமழை தொடர்பாகத் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாரிமுனை மற்றும் கத்திவாக்கம் பகுதிகளில் மேக வெடிப்பு போன்ற தீவிர மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகக் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 18, 2026: வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் அக்டோபர் 17ஆம் தேதி பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பாரிமுனை, கத்திவாக்கம் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் மிக அதிக அளவில் மழை பதிவாகியுள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இடி மின்னலுடன் கொட்டிய மழை:
சென்னையில் கடந்த 25 நாட்களாக மழையின்றி வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக நகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அக்டோபர் 17ஆம் தேதி மாலை தொடங்கிய கனமழை, இரவு முழுவதும் தொடர்ந்து அதிகாலை வரை நீடித்தது.
சுமார் 4 முதல் 5 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. பல்வேறு குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்ததால் சாலைகளில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கியுள்ளது.
சென்னையில் மேக வெடிப்பு – வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன்:
DWM SPECIAL UPDATE ABOUT CHENNAI| DATED 18TH OCT, 2026 1:00 AM IST
==> Rainfall is likely to reduce gradually within 30 minutes.. Light drizzle may continue till early morning, after which conditions are expected to improve, with clearer weather during tomorrow morning hours.
Rainfall recorded so far:
1. Parry’s: crossed 33 cm
2. Kathivakkam: crossed 32 cm
3. Thiruvottiyur & Ennore 20 cm (and significant amounts in several other locations)We’ll take a break now and resume monitoring from tomorrow evening/night at the same time. North Tamil Nadu along with the Delta region will need watching again. The Cuddalore–Villupuram–Thiruvannamalai belt, along with Chennai, should be particularly focused on tomorrow night.
#Chennairains
#chennairains— Delta Weatherman (Hemachander R) (@Deltarains) October 17, 2026
சென்னையில் பெய்த கனமழை தொடர்பாகத் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாரிமுனை மற்றும் கத்திவாக்கம் பகுதிகளில் மேக வெடிப்பு போன்ற தீவிர மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பதிவான அதிகப்படியான மழைப்பொழிவு என அவர் தெரிவித்துள்ளார். அவரது பதிவின்படி, பாரிமுனையில் சுமார் 33 சென்டிமீட்டர் மழையும், கத்திவாக்கத்தில் 32 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதிகளில் சுமார் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை!
Chennai right now:
Cloudburst-level rain in North Chennai.
Roads turned into rivers.
Thunder that never stops.Parrys, Manali, Ambattur — all under water.
Flights diverted. Waterlogging everywhere.Every year same story.
Every year same surprise.Stay safe.
#ChennaiRains #TNRains— Durgesh Shukla (@mydurgeshshukla) October 17, 2026
சென்னையில் பெய்த தொடர் கனமழையால் ராயப்பேட்டை, பாரிமுனை, வடசென்னை, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் தரைத்தளக் குடியிருப்புகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது.
விடுமுறை நாட்களை முன்னிட்டு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் சொந்த ஊர்களுக்குச் செல்லக் காத்திருப்போர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்!
சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உதவி பெறுவதற்காக 24 மணி நேரக் கட்டுப்பாட்டு மையமும் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கெல்லாம்?
பொதுமக்கள் மழைநீர் தேக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் தொடர்பாக 1913 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா:
BREAKING:
Minister Aadhav Arjuna inspects rainwater removal work at Broadway Kuralkam Junction in Royapuram following heavy rainfall in Chennai. Corporation officials were also present.
#ChennaiRains #Chennai https://t.co/3vGQa2KmB4
— Actor Vijay Team (@ActorVijayTeam) October 18, 2026
சென்னையில் கனமழை மற்றும் தண்ணீர் தேக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நள்ளிரவில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது, மழைநீர் வடிகால் பணிகளின் நிலை, தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகள் மற்றும் மழைநீரை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையரிடம் கேட்டறிந்தார்.
இன்று மாலையும் மழை அதிகரிக்க வாய்ப்பு!
அக்டோபர் 18ஆம் தேதியான இன்று பகல் நேரத்தில் மழையின் தீவிரம் குறைவாக இருக்கக்கூடும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மீண்டும் மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், சென்னையில் அடுத்த சில நாட்களுக்கும் மழை தொடர வாய்ப்புள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.