உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கெல்லாம்?
Rainfall Alert: அக்டோபர் 18ஆம் தேதியான இன்று, நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 18, 2026: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல மாதங்களாக வறண்ட வானிலை நிலவி வந்த சூழலில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 17ஆம் தேதி மாலை முதல் இரவு முழுவதும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. குறிப்பாக, மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து மழை பெய்ததால், நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனை அகற்றும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
அக்டோபர் 17ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சி, மத்திய வளிமண்டல அடுக்குகள் வரை நீடித்தது. இதன் காரணமாக, அக்டோபர் 19ஆம் தேதியளவில் அதே பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 18ஆம் தேதியான இன்று, நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 19: கனமழைக்கு வாய்ப்பு
அக்டோபர் 19ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை:
அக்டோபர் 20ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: குறுகிய நேரத்தில் அதி கனமழை – இரவு முழுவதும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
அக்டோபர் 21: தென் மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
அக்டோபர் 21ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 22: 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அக்டோபர் 22ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: அதிமுகவில் இணையும் தனுஷ்? – ராஜேந்திர பாலாஜி அளித்த விளக்கம்
அக்டோபர் 23: 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
அக்டோபர் 23ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அக்டோபர் 18ஆம் தேதி வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.