குறுகிய நேரத்தில் அதி கனமழை – இரவு முழுவதும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
Chennai Heavy Rain Alert : சென்னை - தண்டையார்பேட்டையில் அக்டோபர் 17, 2026 வெறும் 1 மணி நேரத்தில் 7.3 செ.மீ. அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. மேலும் அக்டோபர் 17, 2026 இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை நிலவரப்படி, தண்டையார்பேட்டையில் 7.3 செ.மீ., கொரோனேஷன் நகரில் 7 செ.மீ., திருவொற்றியூரில் 6.9 செ.மீ., மழை பதிவாகியுள்ளனது
சென்னை, அக்டோபர் 17 : சென்னை – தண்டையார்பேட்டையில் அக்டோபர் 17, 2026 வெறும் 1 மணி நேரத்தில் 7.3 செ.மீ. அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. மேலும் அக்டோபர் 17, 2026 இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை நிலவரப்படி, தண்டையார்பேட்டையில் 7.3 செ.மீ., கொரோனேஷன் நகரில் 7 செ.மீ., திருவொற்றியூரில் 6.9 செ.மீ., மழை பதிவாகியுள்ளனது. மேலும் அக்டோபர் 17, 2026 சென்னையில் இன்று இரவு முழுவதும் கனமழை (Heavy Rain) பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 1 மணி நேரத்தில் 7.3 செ.மீ மழை
சென்னை, திருவொற்றியூர் கார்கில் நகரில் 10.9 செ.மீ. மழையும், சாத்தாங்காடு பகுதியில் 10.6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளன. இவ்வளவு மழை ஒரு மணி நேரத்துக்குள் பெய்தது, மேக வெடிப்பைப் போன்ற நிகழ்வு எனப் பிரபல தனியார் வானிலை ஆய்வாளரும், தமிழக அரசின் எல் நினோ தாக்க ஆய்வுக் குழு உறுப்பினருமான பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இதையும் படிக்க : எளிய மக்களின் வாழ்வியலை சொன்னவர்… – இசையமைப்பாளர் தேவாவின் மறைவிற்கு துணைக் குடியரசுத் தலைவர் இரங்கல்




ஒரு சிறிய நிலப்பரப்பில், ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. அல்லது அதற்கு மேற்பட்ட மழை பெய்வதை இந்திய வானிலை ஆய்வு மையம் மேக வெடிப்பு என வரையறுக்கிறது. வடசென்னையில் பெய்த மழை அந்த அளவை எட்டியுள்ளது. எனினும், இதனை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக மேக வெடிப்பாக அறிவிக்கவில்லை.
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாகக் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாகப் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. வட தமிழகம் மற்றும் அதையொட்டிய தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கர்நாடகக் கடலோரத்துக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியிலிருந்து குமரிக்கடல் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நீண்டுள்ளது.
இதையும் படிக்க : பருவமழை தீவிரம்: “தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்கு தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை”.. சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு!!
மேலும், லட்சத்தீவின் வடக்குப் பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. அதிலிருந்து கேரளா, தமிழகம் வழியாகத் தென்மேற்கு வங்கக்கடல் வரை மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது.