AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எளிய மக்களின் வாழ்வியலை சொன்னவர்… – இசையமைப்பாளர் தேவாவின் மறைவிற்கு துணைக் குடியரசுத் தலைவர் இரங்கல்

Vice President Mourns Deva : இசையமைப்பாளர் தேவாவின் மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவாவின் மறைவு தமிழ் இசையுலகுக்குப் பேரிழப்பு எனக் குறிப்பிட்டு, குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார். காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் பல பாடல்களை தேவா தமிழுக்குத் தந்துள்ளதாகவும் புகழாரம் தெரிவித்தார்.

எளிய மக்களின் வாழ்வியலை சொன்னவர்… – இசையமைப்பாளர் தேவாவின் மறைவிற்கு துணைக் குடியரசுத் தலைவர் இரங்கல்
சி.பி.ராதாகிருஷ்ணன் - தேவா
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Oct 2026 17:35 PM IST

தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் (Vice President C.P.Radhakrishnan) ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தேவாவின் இசைப் பங்களிப்பை அவர் நினைவுகூர்ந்துள்ளார். தேவா மறைந்த செய்தி தனக்குப் பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளித்ததாகக் குறிப்பிட்டுள்ள ராதாகிருஷ்ணன், அவரது இசையின் தனித்தன்மையையும் தனது பதிவில் எடுத்துரைத்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல்

சாமானிய மக்களின் உணர்வுகளையும் அன்றாட வாழ்க்கையையும் தனது இசையிலும், குறிப்பாகக் கானா பாடல்களிலும் உயிரோட்டத்துடன் வெளிப்படுத்தியவர் தேவா என்று அவர் பாராட்டியுள்ளார். தனக்கென உருவாக்கிக்கொண்ட தனித்துவமான இசைப் பாணியால், ரசிகர்களின் மனங்களில் அவர் நீங்கா இடம்பிடித்தவர் என்றும் ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதையும் படிக்க : சிங்கப்பூர் அதிபரின் இறுதி நிகழ்வில் ஒலிக்கப்பட்ட தேவா பாடல் – நெகிழ்ச்சி சம்பவம்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். மேலும் இசையமைப்பாளராக மட்டுமின்றி, பாடலாசிரியர், பாடகர் எனப் பல்வேறு தளங்களிலும் தனது திறமையை நிரூபித்தவர் தேவா என்றும் குறிப்பிட்டுள்ளார். காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் பல பாடல்களை தேவா தமிழுக்குத் தந்துள்ளதாகவும், அவரது இசைப் பங்களிப்பும் தனித்துவமான கானா பாடல்களும் என்றென்றும் நினைவுகூரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேவாவின் மறைவு தமிழ் இசையுலகுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு எனக் குறிப்பிட்டுள்ள குடியரசு துணைத் தலைவர், அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர், இசை ரசிகர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

நாளை இறுதிச் சடங்கு

இசையமைப்பாளர் தேவா அக்டோபர் 17, 2026 இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். இசையுலகுக்கு அவர் ஆற்றிய சேவையைச் சிறப்பிக்கும் வகையில், அவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து தேவாவின் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் அக்டோபர் 18, 2026 நாளை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளதாக அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : Deva: தேனிசை தென்றால் தேவாவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள்!

இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவாவின் மறைவு குறித்து வீடியோ வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மறைவு, மிக அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவர் என்னுடைய 3 படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். அண்ணாமலை, பாட்ஷா மற்றும் அருணாச்சலம் இந்த படங்களெல்லாம் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதன் பிறகு படையப்பா படம் எடுக்கும்போது, எனது நண்பர்கள் எல்லாம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க சொன்னபோது, அவரிடம் நானே சொன்னேன்.அவரும் ஏ.ஆர்.ரஹ்மான் புதிய நபர் வரட்டும் சினிமாவிற்கு என மகிழ்ச்சியாக தெரிவித்தார் என உருக்கமாக பேசினார்.

Follow Us