Rajinikanth: சொக்கத் தங்கம்.. மறைந்த இசையமைப்பாளர் தேவா குறித்து ரஜினிகாந்த் பேசிய வீடியோ!
Rajinikanths Emotional Tribute to Deva: தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்று (17/10/2026) தமிழ் சினிமாவின் பழம்பெரும் இசையமைப்பாளர் தேவா காலமான நிலையில், அவரின் உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் தற்போது தேவா குறித்து பேசி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கோலிவுட் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth). இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவரும் நிலையில், தொடர்ந்து புதிய படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதியில் ஜெயிலர் 2 (Jailer 2) படமானது வெளியாகியிருந்த நிலையில், மிகவும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த விதத்தில் இந்த கொண்டாட்டத்தின் போது, தற்போது தமிழ் சினிமாவில் பெரும் இழப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. பழம்பெரும் இசையமைப்பாளர் தேவா (76) (Music Director Deva) திடீர் மாரடைப்பின் காரணமாக இன்று (17/10/2026) காலமானார் ( Devas Funeral). இவரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு தமிழ் பிரபலங்களும் இரங்கல்களை தெரிவித்துவருகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறைந்த தேவாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தில், அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருந்தார். அந்த விதத்தில், இசையமைப்பாளர் தேவா குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.




இதையும் படிங்க: தேவாவின் மறைவு – இசைப் பணிகளை நிறுத்திய இளையராஜா – வெளியான தகவல்
இசையமைப்பாளர் தேவா குறித்து ரஜினிகாந்த் பேசிய விஷயம்:
அந்த வீடியோவில் பேசிய ரஜினிகாந்த், “எனது நண்பர், இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மறைவு, மிக அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவர் என்னுடைய மூன்று படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். அண்ணாமலை, பாஷா மற்றும் அருணாச்சலம் இந்த படங்களெல்லாம் மிகப்பெரிய சக்ஸஸ். அதன் பிறகு படையப்பா படம் எடுக்கும்போது, எனது நண்பர்கள் எல்லாம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க சொன்னபோது, அவரிடம் நானே சொன்னேன்.
இதையும் படிங்க: மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு அரசு மரியாதை – தமிழக அரசு அறிவிப்பு
அவரும் ஏ.ஆர்.ரஹ்மான் புதிய நபர் வரட்டும் சினிமாவிற்கு என புன்னகைத்தபடியே என்னிடம் பேசியிருந்தார். நான் உங்களுடன் 3 படங்கள் பண்ணாதே பெரிய பாடு. இந்த மாதிரி மிகவும் கள்ளம் கபடம், பொய் வஞ்சகம் இல்லாத ஒரு அருமையான சொக்கத் தங்கம், தேவா அவர்கள்” என கூறியிருந்தார். மேலும் தேவா வாழ்க்கையில் பட்ட கஷ்டம் மற்றும் சினிமாவில் அவர் பட்ட கஷ்டங்கள் மற்றும் வெற்றிகள் குறித்து அந்த வீடியோவில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
மறைந்த இசையமைப்பாளர் தேவா குறித்து ரஜினிகாந்த் பேசிய வீடியோ குறித்த பதிவு:
Superstar Rajinikanth expresses his deep condolences on the sudden demise of legendary music composer Thenisai Thendral Deva, who gifted Tamil cinema with several timeless musical masterpieces, including the iconic albums Annamalai and Baashaa. https://t.co/dcCLFSDf38
— Sreedhar Pillai (@sri50) October 17, 2026
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடல் தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது இறுதிச்சடங்கு அரசுமரியாதையுடன் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல்வேறு நட்சத்திர நடிகர்கள் மற்றும் பிரபலன்களும் இவரின் இறப்புக்கு இரங்கல்கள் தெரிவித்துவருகிறார்கள்.