அனிருத் – காவ்யா மாறன் திருமணம்… முதலமைச்சர் விஜய்க்கு நேரில் அழைப்புவிடுத்த கலாநிதிமாறன் – வைரலாகும் போட்டோஸ்!
Anirudh Ravichander and Kavya Maran Wedding Reception | தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக உள்ள அனிருத் ரவிச்சந்தர் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை திருமணம் செய்ய உள்ள நிலையில் முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் ரசிகர்களால் ராக் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். சின்ன வயசுல இருந்தே இசை மீது ஆர்வம் கொண்ட அனிருத் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனதற்கு முக்கிய காரணமாக நடிகர் தனுஷ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 3 படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். தொடர்ந்து இவரது இசையில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் திரையுலகில் மோஸ்ட் எலிஜிபில் பேச்சுளராக வலம் வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திருமணம் குறித்து சில கிசுகிசுக்குகள் வைரலாகி வந்தது. அதன்படி அவர் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் ஒரே மகளான காவ்யா மாறனை டேட் செய்து வருவதாகவும் தகவல்கள் வைரலாகி வந்தது. மேலும் இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக வலம் வரும் வீடியோ மற்றும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது.




அனிருத் – காவ்யா மாறன் திருமணம்… முதலமைச்சர் விஜய்க்கு நேரில் அழைப்பு:
இந்த நிலையில் தற்போது தகவல்கள் அனைத்தும் உண்மையாக மாறி உள்ளது. அதன்படி இசையமைப்பாளர் அனிருத் – காவ்யாவின் திருமணம் வருகின்ற 11-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 21-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு சென்னையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற உள்ளது. அந்த விழாவிற்காக கலாநிதிமாறன் மற்றும் அவரது மனைவி உடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் முதலமைச்சர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளனர். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… Jailer 2 Review : ரசிகர்களை கவர்ந்ததா? ஜெயிலர் 2 படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
OFFICIAL – #CMVijay / #ThalapathyVijay has been invited to the wedding of #Anirudh & #KavyaMaran by Sun Group Chairman #KalanithiMaran sir! 💐💍 https://t.co/K186hUzArX
— Movies Singapore (@MoviesSingapore) October 17, 2026
Also Read… பயமா எனக்கா? பிக்பாஸில் போட்டியாளர்களை வெறுப்பேற்றும் டிடிஎஃப் வாசன் – வைரலாகும் வீடியோ