கலகலப்பாக வெளியானது கீர்த்தி சுரேஷின் சத்யவான் சாவித்திரி படத்தின் டீசர்!
Sathyavan Savithiri Movie Official Teaser | நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சத்யவான் சாவித்திரி. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து தென்னிந்திய மொழியில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் இறுதியாக டோரதி என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் சத்யவான் சாவித்திரி ஆகும். இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.




வெளியானது கீர்த்தி சுரேஷின் சத்யவான் சாவித்திரி படத்தின் டீசர்:
அதன்படி கோர்ட் ரூம் ட்ராமாவாக உருவாகி உள்ள இந்தப் படத்தின் போஸ்டர் முன்னதாக வெளியானது. அப்போது இந்தப் படம் மிகவும் சீரியசான கதையம்சத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதனைப் பார்க்கும் போது இந்தப் படம் மிகவும் காம்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தப் படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… நட்பின் பிரிவா? சாதிகா மற்றும் முகேஷ் இடையே ஏற்பட்ட சங்கடம் – வைரலாகும் ப்ரோமோ!
சத்யவான் சாவித்திரி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
ORDER! ORDER!
Savithiri’s Madness Now in Session! 🔥😎#SathyavanSavithiri Teaser OUT NOW!
Tamil ▶️ – https://t.co/C6zCXS641z
Telugu ▶️ – https://t.co/IEYjeDfs8xWorldwide Release — Nov 20, 2026.
#SathyavanSavithiriFromNov20 @KeerthyOfficial @DirectorMysskin @PraveenSVijaay https://t.co/eMCw6zvkT6
— Drumsticks Productions (@DrumsticksProd) October 14, 2026