Nayanthara: அரசியலுக்கு வருகிறாரா நயன்தாரா? கணவர் விக்னேஷ் சிவன் கொடுத்த விளக்கம்!
Nayanthara Politics Rumors: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் நயன்தாரா. இவரின் நடிப்பில் பான் இந்திய மொழிகளில் படங்கள் உருவாகிவருகிறது. இவர் அரசியலில் இறங்கவுள்ளார் என சமீபகாலமாக வதந்திகள் வெளியான நிலையில், அது குறித்து விக்னேஷ் சிவன் விளக்கம் கொடுத்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்துவருபவர் நடிகை நயன்தாரா (Nayanthara). இவர் மலையாள சினிமாவின் மூலம் நாயகியாக நுழைந்த நிலையில், தற்போது பான் இந்திய மொழிகளில் படங்களில் நாயகியாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஹாய் (Hi Movie). இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய படங்களிலும் இவர் நாயகியாக நடித்துவருகிறார். இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் என பேக் டூ பேக் படங்களை தனது கைவசம் நயன்தாரா வைத்துள்ளார். மேலும் படப்பிடிப்புகள் இல்லாத நேரங்களில் தனது குடும்பத்துடன் சிறப்பாக நேரத்தை செலவிட்டு வருகிறார்.
அந்த விதத்தில் இவர் அரசியலில் நுழைவதாக சமீபகாலமாக இணையத்தில் வதந்திகள் பரவிவருகிறது. அது குறித்து நயன்தாராவின் கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) விளக்கம் கொடுத்துள்ளார்.




இதையும் படிங்க: பூஜா ஹெக்டேவின் பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டரை வெளியிட்டது ஸ்ரீ ஸ்ரீ படக்குழு!
நயன்தாரா அரசியல் வருவாரா என்பது குறித்து விக்னேஷ் சிவன் விளக்கம்:
விக்னேஷ் சிவனிடம் நயன்தாரா அரசியலுக்கு வருவாரா ? என கேள்வி கேட்கப்பட்டிருந்தது, அதற்கு பதிலளித்த அவர் விக்னேஷ் சிவன், “நயன்தாரா தற்போது குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதில் கவனத்தை செலுத்திவருகிறார். அதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி கிடைக்கிறது. அதற்கு பிறகு அவர் தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்துவர்” என அதில் அவர் விளக்கமாக பேசியிருந்தார். இந்நிலையில் நயன்தாரா அரசியலுக்கு வருகிறார் என்ற வதந்தியானது முடித்துவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: ஊரே துணை இருக்கு எனக்கிங்கு வேறு உறவெதுக்கு? 20 ஆண்டுகளைக் கடந்து நடிகர் சிம்புவின் வல்லவன் படம்!
நடிகை நயன்தாரா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
Is Nayanthara entering politics?
Husband Vignesh Shivan has addressed the rumours, saying she is currently focused on motherhood, family and her career amid speculation following Vijay’s political rise.
#Nayanthara #Vijay #Kollywood #TamilNaduPolitics https://t.co/PjsSl5inN2— Diganta Guha (@diganta_guha) October 12, 2026
நடிகை நயந்தாராவின் நடிப்பில் தமிழ் புது புது படங்கள் உருவாகிவருகிறது. மேலும் இந்தியில் இவர் சல்மான்கானுக்கு ஜோடியாகவும் புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் ராக்காயி, மண்ணாங்கட்டி, மூக்குத்தி அம்மன் 2 போன்ற படங்கள் தயாராகிவருகிறது. இதில் மூக்குத்தி அம்மன் 2 படமானது 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்னும் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.