பூஜா ஹெக்டேவின் பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டரை வெளியிட்டது ஸ்ரீ ஸ்ரீ படக்குழு!
Sri Sri Movie Team | தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் ஸ்ரீ ஸ்ரீ படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே. தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகம் ஆனார். இவர் அறிமுகம் ஆன முதல் படம் தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. பிறகு நடிகை பூஜா ஹெக்டே முழுவதுமாக தெலுங்கு சினிமாவில் அதிக அளவில் கவனத்தை செலுத்தி வந்தார். தொடர்ந்து தெலுங்கு மொழியில் படங்களில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே அவ்வபோது தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார்.
இறுதியாக தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜய் உடன் இணைந்து ஜன நாயகன் படத்தில் நடித்து இருந்தார். இவரது கதாப்பாத்திரம் படத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றது.




பூஜா ஹெக்டே பர்த்டே ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டது ஸ்ரீ ஸ்ரீ டீம்:
அந்த வகையில் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் தெலுங்கு சினிமாவில் தற்போது உருவாகி வரும் படம் ஸ்ரீ ஸ்ரீ. இந்தப் படத்தை இயக்குநர் ரவி நெலகுடிடி எழுதி இயக்கி உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருக்கு ஜோடியாகதான் நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நடிகை பூஜா ஹெக்டே தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… பார்வதியின் நடிப்பில் வெளியான பிரதம திருஷ்டிய குட்டக்கர் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ!
ஸ்ரீ ஸ்ரீ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Happy Birthday to our gorgeous @hegdepooja ❤️
You made this story all the more beautiful with your charm and grace ✨
-Team #SriSri
#LoveWillSparkAgain
Starring @dulQuer, @hegdepooja & @Dheekshiths
Directed by @ravinelakuditi9
Music by @gvprakash
Cinematography by #SrinivasReddy
Editing by #KotagiriVenkateswaraRao
Production design by @artkolla
Produced by @sudhakarcheruk5 under @SLVCinemasOffl
Music on @saregamasouth— SLV Cinemas (@SLVCinemasOffl) October 13, 2026
Also Read… தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் மண்டாடி பட வில்லன்.. சூரி பகிர்ந்த டைட்டில் புரோமோ!