AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக் பாஸில் டாஸ்குக்காக அன்சரை குறிவைக்கும் பெண் போட்டியாளர்கள்.. மோதலில் முடித்த பிளான்!

Bigg Boss Tamil 10 Week 6: தமிழில் இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் 6வது வாரத்தை நோக்கி இந்த நிகழ்ச்சியானது நடந்துவருகிறது. இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்கத்திலே பெண்கள் அணி மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டு, அன்சரை குறிவைக்கும்படியான புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸில் டாஸ்குக்காக அன்சரை குறிவைக்கும் பெண் போட்டியாளர்கள்.. மோதலில் முடித்த பிளான்!
பிக் பாஸ் சீசன் 10 ப்ரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Oct 2026 16:13 PM IST

தென்னிந்திய மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவது பிக் பாஸ் (Bigg Boss). தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் இந்த 2026ம் ஆண்டில் ஒரே நாளில் இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமானது. தமிழில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கப்பட்ட நிலையில், சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த போட்டியானது 6 வது வாரத்தில் இருக்கும் நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த வாரத்தில் எந்த போட்டியாளர்களும் வெளியேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 6வது வாரத்தின் தொடக்கத்தில் இந்த பிக் பாஸ் வீட்டில், பெண் போட்டியாளர்கள் பலரும் குழுவாக இணைந்து இந்த வீட்டின் தலைவரான அன்சரை டார்கெட் செய்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் மாஸ்டர் பிளான் போடும் புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த புரோமோவில் ஷமா மற்றும் பெண் போட்டியாளர்கள் பிளான் போட்டது தொடர்பான புரோமோ இணையத்தில் பரவிவருகிறது.

இதையும் படிங்க: ஜேசன் சஞ்சய் நாயகனாக அறிமுகம் ஆகும் படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்

அன்சரை டார்கெட் செய்து மாஸ்டர் பிளான் போட்ட பெண் போட்டியாளர்கள்:

இந்த புரோமோவில், பெண் போட்டியாளர்கள் ஷமா, அக்ஷிதா, சாந்தினி, சாதிகா மற்றும் முத்தழகி போன்ற பெண் போட்டியாளர்கள் கேமராவின் முன் அன்சரை டார்கெட் செய்யும் விதத்தில் மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளனர். இதை பிக் பாஸிடம் அவர்கள் கூறியுள்ளனர். இதன் பிறகு நேராக முத்தழகி, அன்சரிடம் நாங்கள் உங்களிடம் பேசவரலாமா என கேட்டிருந்தார்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் – அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங்க் எப்போது? வைரலாகும் தகவல்

உடனே அன்சர், மீட்டிங்கில் இருக்கிறேன் முடித்துவிட்டு பேசுகிறேன் என கூறினார். உடனே சாதிகா வந்து, அன்சரிடம் கத்தி சண்டையை வளர்க்கிறார். மேலும் மற்ற பெண் போட்டியாளர்களும் இணைந்து அன்சரிடம் கத்தி பேச தொடங்கிவிட்டரானர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 36வது நாளின் 3வது புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த நிகழ்ச்சியில் கடந்தவாரத்தில் எந்தவித எவிக்ஷனும் இல்லை அந்த விதத்தில், வரும் வார இறுதியில் 2 எவிக்ஷன் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், அதிக டிஆர்பி ரேட்டிங்கையும் பெற்றுவருகிறது.

Follow Us