பிக்பாஸ் தமிழில் இந்த வாரம் நடைபெறும் ஓபன் நாமினேஷன்… வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 5 வாரங்கள் முடிவடைந்து 6-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ப்ராசசிற்காக பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைப்பெற்றுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி கடந்த 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06-ம் தேதி மிகவும் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கி தற்போது 5 வாரங்கள் முடிவடைந்து 6-வது வாரத்தை எட்டியுள்ளது. முன்பு எந்த சீசனிலும் இல்லாத ஒன்றாக இந்த 10-வது சீசனில் பல ட்விஸ்ட்கள் மற்றும் சர்ப்ரைஸ்கள் நிறைந்து காணப்படுகின்றது. மேலும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடைபெறும் டாஸ்குகளும் பார்வையாளர்களை மிகவும் கவரும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே அதிக அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. பிக்பாஸ் தமிழ் சீசன் தொடங்கியதில் இருந்து ஒரு சீசனுக்கு ஒரு முறையாவது ஓபன் நாமினேஷன் என்பது நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
அப்படி ஓபன் நாமினேஷன் நடைபெறும் போது இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்ற யார் தகுதியானவர்கள் மற்றும் அவர்கள் ஏன் இந்த போட்டியில் இருந்து வெளியேற வேண்டும் என்ன காரணம் என்பதை பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையிலும் வெளிப்படையாக கூற வேண்டும். இப்படி நடக்கும் போது அந்த நிகழ்ச்சியில் இணக்கமாக இருப்பவர்களுக்கு கூட பிரச்சனை நிலவுவது வழக்கமாக உள்ளது.




பிக்பாஸ் தமிழில் இந்த வாரம் நடைபெறும் ஓபன் நாமினேஷன்:
இந்த நிலையில் இன்று 36-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் முதல் ஓபன் நாமினேஷன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற நினைக்கும் போட்டியாளர்களை மற்ற போட்டியாளர்கள் ஓபனாக நாமினேட் செய்வதும் அந்த வீடியோவில் காணக் கிடைக்கின்றது. இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day36 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9.30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #BiggBossTheTurningPoint #BBTurningPoint #TheTurningPoint #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #VijayTV #VijayTelevision
— Vijay Television (@vijaytelevision) October 12, 2026
Also Read… ரணபாலி படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? போஸ்டர் வெளியிட்ட படக்குழு