வாரம் முழுவதும் டாஸ்கில் சண்டை… வார இறுதியில் லட்டரில் நெகிழ்ச்சி… நேற்றைய எபிசோடில் நடந்தது இதுதான்!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து கடந்த 4 வாரங்களாக டாஸ்கில் காட்டாத முனைப்பு இந்த 5-வது வாரம் அதிக அளவில் காட்டினார்கள். இப்படி இருக்கும் சூழலில் நேற்றைய எபிசோடில் பல நெகிழ்ச்சி சம்பவங்களும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து அதிக அளவில் போட்டியாளர்களுக்கு டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த 4 வாரங்களாக இல்லாத ஒன்றாக இந்த 5-வது வாரம் டாஸ்க்கில் போட்டியாளர்கள் அதிக அளவில் முனைப்புடன் விளையாடினர். வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு இரண்டு நபர்களாக பிரிந்து வாரம் முழுவதும் டாஸ்கில் விளையாடினர். டாஸ்க் விளையாடுவதற்கு உடலில் அதிக பலம் இருந்தால் மட்டும் போதாது சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதும் முக்கியம் என்பதற்கு உதாரணம் முத்தழகி மற்றும் முனியம்மாள் இருவரும் அந்த டாஸ்கில் வெற்றியைப் பெற்றது தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த வாரம் டாஸ்கில் வெற்றிப் பெற்ற முனியம்மாள் மற்றும் முத்தழகிக்கு வார இறுதியில் எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் வழங்கப்பட உள்ளது.
மேலும் இவர்கள் இருவரும் நேரடியாக அடுத்த வாரத்திற்கான லீடர் பதவிக்கான போட்டியில் போட்டியிடவும் உள்ளனர். இவர்களுடன் இணைந்து வாரம் முழுவதும் சிறப்பாக பங்கேற்ற நபராக உள்ள அன்சரும் லீடர் போட்டியில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




வாரம் முழுவதும் டாஸ்கில் சண்டை… வார இறுதியில் நெகிழ்ச்சி:
இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் டாஸ்க் முடிந்த பிறகு வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு மற்ற போட்டியாளர்களில் யாரை அதிகம் பிடிக்குமே அவர்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று பிக்பாஸ் ஒரு டாஸ்கை அளித்து இருந்தார். அந்த டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தங்களது உணர்வுகளை கடிதங்கள் மூலம் வெளிப்படுத்தி வந்தனர். இந்த வாரம் முழுவதும் டாஸ்கின் காரணமாக அடித்துக்கொண்ட போட்டியாளர்கள் இந்த ஒரே ஒரு லட்டர் டாஸ்கில் நெகிழ்ச்சியடைந்து கண்ணீர் விட்டது பார்ப்பவர்களையும் கலங்க செய்தது குறிப்பிடத்தக்கது.
Also Read… பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்.. மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்.. திரையுலகில் பெரும் சோகம்!!
இணையத்தில் வைரலாகும் பதிவு:
#Day33 #Promo3 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/emUWSPvTQt
— Vijay Television (@vijaytelevision) October 9, 2026
Also Read… பிக்பாஸில் கடுமையாக மோதிக்கொள்ளும் அவினாஷ் – ஜேஷன்… அனல் பறக்கும் வீடியோ