AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் டாஸ்கின் போது வாக்குவாதத்தில் ஈடுபடும் ஜேசன் – அவினாஷ்… வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து ஜேசன் சொல்வதைதான் அவினாஷ் கேட்கிறார் என்று சக போட்டியாளர்கள் கூறி வந்த நிலையில் இன்று டாஸ்கின் போது ஜேசன் மற்றும் அவினாஷ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸில் டாஸ்கின் போது வாக்குவாதத்தில் ஈடுபடும் ஜேசன் – அவினாஷ்… வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Oct 2026 10:40 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும் பஞ்சமே இல்லாமல்தான் சென்று கொண்டு இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் டாஸ்குகளுக்கும் பஞ்சமே இல்லாமல் தொடர்ந்து தினமும் ஏதேனு ஒரு டாஸ்கை நிகழ்ச்சி குழு கொடுத்து வருகின்றது. மேலும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி மொத்தம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு போட்டியாளர்கள் மற்றும் கடந்த வார இறுதியில் 3 போட்டியாளர்கள் என மொத்தம் 25 போட்டியாளர்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் வீட்டிற்குள் அனுப்பட்டனர். இதில் முதல் வாரமே உடல்நலக் குறைவு காரணமாக ப்ளாக் பாண்டி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் 5 போட்டியாளர்கள் இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர். அதில் குமரன் மட்டும் பணப்பெட்டி டாஸ்கில் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

இந்த நிலையில் தற்போது மீதம் உள்ள போட்டியாளர்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. ஒரு பக்கள் போட்டியாளர்கள் கடுமையாக விளையாடிக்கொண்டு இருக்கும் போது மற்றொரு பக்கம் ஒரு சில போட்டியாளர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு இந்த நிகழ்ச்சியில் இருக்கிறார்கள் என்ற கமெண்ட்ஸ்களையும் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸில் டாஸ்கின் போது வாக்குவாதத்தில் ஈடுபடும் ஜேசன் – அவினாஷ்:

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஜேசன் கூறுவதை அப்படியா செய்யும் நபராக அவினாஷ் இருக்கிறார் என்ற கருத்தை சக போட்டியாளர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் இன்றைய டாஸ்கின் போது அவினாஷ் மற்றும் ஜேசன் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெறுகின்றது. அதில் இருவரும் கடுமையாக பேசிக்கொள்வது தெரிகிறது. இதனைப் பார்க்கும் மற்ற போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைகின்றனர் என்பது அந்த வீடியோவைப் பார்க்கும் போதே தெரிகின்றது.

Also Read… முனியம்மாள் கிளப்பிவிட்ட பிரச்சனை… பிக்பாஸில் பூகம்பமாக வெடித்த சண்டை – வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… யூத் பட தயாரிப்பு நிறுவனம் மீது அதிருப்தியில் இருக்கும் கென் கருணாஸ்?

Follow Us