பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட கலேபர டாஸ்க் – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 30-வது நாளை எட்டியுள்ளது. இந்த 4-வது வாரம் தொடக்கமே தொடர்ந்து பிரச்சனையுடனே தொடங்கிய நிலையில் பிக்பாஸ் வீடே கலேபரமாக உள்ள வீடியோ வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 4 வாரங்களை முடிவடைந்த நிலையில் தற்போது 5-வது வாரம் நடைப்பெற்று வருகின்றது. அதன்படி இந்த வாரம் வீட்டின் லீடராக வைல்கார்ட் எண்ட்ரி கொடுத்த அக்ஷிதா தேர்வாகி உள்ளார். இவர் லீடராக தேர்வானதில் இருந்தே தொடர்ந்து போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து பல சண்டைகளும் நடைப்பெற்று வருகின்றது. நேற்று வாரத்தின் முதல் நாளே பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் இடையே சண்டை தொடங்கிய நிலையில் இன்றைய எபிசோடிலும் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி முதலாவதாக வெளியான புரோமோ வீடியோவில் முனியம்மாவாள் வீட்டில் ஒரு சண்டை ஏற்படுவது போல காட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதன்படி தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் சண்டைகள் ஒரு பக்கம் தொடர்ந்து நடைப்பெற்று வந்தாலும் டாஸ்குகளும் தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் மேஜிக் போஷன் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.




பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட கலேபர டாஸ்க்:
இந்த டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 4 அணிகளாக பிரிந்து விளையாடுகின்றனர். மேலும் இதில் ப்ளூ மற்றும் ரெட் என இரண்டு வண்ணங்களில் திரவம் கொடுக்கப்படுகின்றது. அதை வைத்துதான் இந்த டாஸ்கை போட்டியாளர்கள் விளையாடுகின்றனர். இந்த புரோமோவைப் பார்க்கும் போது நீலம் நிறம் உள்ள திரவம் அதிகம் உள்ளவர்கள் போட்டியில் வெற்றியைப் பெறுவது போலவும் சிகப்பு நிற திரவும் உள்ளவர்கள் போட்டியில் நெகட்டிவ் பாய்ண்ட்ஸ் எடுப்பது போல தெரிகிறது. இன்றைய எபிசோடைப் பார்க்கும் போது அது தெளிவாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… தனுஷின் ஓம் படத்தின் 2-வது சிங்கிள் குறித்து அப்டேட் வெளியிட்ட படக்குழு!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day30 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9.30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #BiggBossTheTurningPoint #BBTurningPoint #TheTurningPoint #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #VijayTV #VijayTelevision
— Vijay Television (@vijaytelevision) October 6, 2026
Also Read… Tamannaah: நான் மிகவும் கூலான அம்மாவாக இருப்பேன் – தமன்னா ஓபன் டாக்!