AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒன்று சேர்ந்தால் மட்டும் தான் காதலா? 8 ஆண்டுகளை நிறைவு செய்தது விஜய் சேதுபதி – த்ரிஷாவின் 96 படம்!

8 Years Of 96 Movie: நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்து திரையரங்குகளில் வெளியான படம் 96. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை படக்குழு மற்றும் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

ஒன்று சேர்ந்தால் மட்டும் தான் காதலா? 8 ஆண்டுகளை நிறைவு செய்தது விஜய் சேதுபதி – த்ரிஷாவின் 96 படம்!
96 படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 04 Oct 2026 15:53 PM IST

தமிழ் சினிமாவில் காதலில் வெற்றிப் பெற்றவர்களின் காவியங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது ஒரு பக்கம் இருந்தாலும் காதலித்து சேராமல் போன ஜோடியை கொண்டாடியதும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அதிலும் தமிழ் சினிமாவில் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் 96. இந்தப் படத்தை இயக்குநர் பிரேம் குமார் (Director Prem Kumar_ எழுதி இயக்கி இருந்தார். இவர் ஒளிபதிவாளராக இருந்து வந்த நிலையில் இந்த 96 படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குநராக பிரேம் குமார் அறிமுகமான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணா நாயகியாக நடித்து உள்ளார்.

இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 04-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் படம் தற்போது 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ரசிகர்களும் படக்குழுவினரும் கொண்டாடி வருகின்றனர்.

8 ஆண்டுகளை நிறைவு செய்தது விஜய் சேதுபதி – த்ரிஷாவின் 96 படம்:

இந்த 96 படத்தில் பள்ளியில் படிக்கும் போதே விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் இருவரும் தங்களது காதலை வெளிப்ப்டுத்தவில்லை. இந்த நிலையில் விஜய் சேதுபதி அந்த ஊரில் இருந்து குடும்ப சூழல் காரணமாக வெளியூருக்கு செல்கிறார். இதனால் இவர்களின் காதல் கைகூடாமலே போனது. த்ரிஷாவும் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்கிறார்.

Also Read… SK27: சென்னையில் நடைபெறும் சிவகார்த்திகேயனின் SK27 பட ஷூட்டிங் – வைரலாகும் போட்டோஸ்!

இப்படி இருக்கும் நிலையில் ரீ யூனியன் மூலம் மீண்டும் விஜய் சேதுபதி த்ரிஷா சந்திக்கும் போது அவர்களுக்கு இடையே என்ன நடந்தது என்பதே இந்தப் படத்தின் கதை. இந்தப் படம் பலருக்கும் தங்களது பள்ளி பருவ காதலை நினைத்து ஃபீல் செய்ய வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. கைக்கூடாத காதலில் தவிக்கும் பலருக்கும் இது ஒரு காவியமாகவே தற்போது வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… அஸ்மிதா – சாவன்யா வேலுவை விஜய் சேதுபதி முன் கலாய்த்த வினோத் பாபு – கலகலப்பான புரோமோ!

Follow Us