AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இன்று பிக்பாஸிலிருந்து வெளியேறும் 2 பேர் யார்? வைரலாகும் புரோமோ வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற உள்ளனர். அது தொடர்பான புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று பிக்பாஸிலிருந்து வெளியேறும் 2 பேர் யார்? வைரலாகும் புரோமோ வீடியோ
பிக்பாஸ் தமிழ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Oct 2026 14:05 PM IST

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வரும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 10-வது சீசன் கடந்த செப்டம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு தொடங்கியது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் கடந்த வார இறுதியில் லீடர் எக்ஸிட் முறையில் வெளியேறிய மூன்று போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அவர்கள் வீட்டிற்கு சென்றபோதே இந்த நிகழ்ச்சியின் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. தொடர்ந்து உள்ளே சென்ற மூன்று போட்டியாளர்கள் வீட்டில் உள்ள மூன்று போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்களுடன் தங்களது கைகளை கட்டிக்கொண்டனர். இந்த கயிறை குளிக்கும் போது கூட கழட்ட கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கைகளைக் கட்டிக் கொண்ட போட்டியாளர்களிடையே தொடர்ந்து வாரம் முழுவதும் சலசப்பு நிலவி வந்தது. அது மட்டும் இன்றி அஸ்மிதா மற்றும் சாவ்வன்யா இடையே வாரம் முழுவதும் தொடர்ந்து சண்டைகள் ஏற்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இன்றி வாரத்தின் தொடக்கத்திலேயே இந்த 6 போட்டியாளர்களில் மூன்று பேர் நிச்சயமாக வெளியேறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் குமரன் முன்னதாக பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். இதனைத் தொடர்ந்து இரண்டு போட்டியாளர்கள் நிச்சயமாக இந்த வாரம் வெளியேறுவது உறுதியானது.

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்றைய நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் வாரம் முழுவதும் நடந்த விசயங்களை கூறிய நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதி இன்று எந்த இரண்டு போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேற உள்ளனர் என்பதை முடிவு செய்யலாமா என்றும் கூறுகிறார். இதன் காரணமாக இன்றே இரண்டு போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Also Read… ரவுண்டுகட்டி அடிக்கும் போட்டியாளர்கள்.. திணறும் தான்யா – வைரலாகும் புரோமோ!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும் உன் மகனாகும் வரம் தருவாய் – 22 ஆண்டுகளைக் கடந்தது ரவி மோகனின் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம்!

Follow Us