பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் வைல்கார்ட் போட்டியாளர்கள் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்
Bigg Boss Tamil Season 10 | தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியாக உள்ளது இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியில் புதிதாக 3 வைல்கார்ட் போட்டியாளர்கள் நாளை வீட்டிற்குள் நுழைய உள்ளனர்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 27-வது நாளை எட்டியுள்ளது. முன்பு எந்த சீசனிலும் இல்லாத ஒன்றாக இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பல புது விசயங்களை நிகழ்ச்சி குழு புகுத்தியுள்ளது. இந்த சீசனில் டாஸ்குகளும் சரி போட்டியாளர்களிடையேயான போட்டியும் சரி முன்பை விட பார்ப்பதற்கு விறுவிறுப்பாக உள்ளது என்று மக்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 8-வது சீசன் முதல் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில் இந்த 10-வது சீசனையும் அவரே தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசன் தொடங்கிய போது மொத்தம் 19 போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வைல்கார்ட் போட்டியாளர்களாக அடுத்தடுத்த வாரங்களில் அனுப்பப்பட்னர்.
இந்த நிகழ்ச்சியில் முதல் மூன்று வாரங்களில் லீடர் எக்ஸிட் முறையில் வெளியான மூன்று பேர் மீண்டும் கடந்த வாரம் வீட்டிற்குள் அனுப்பட்டனர். மேலும் 2 பேர் எவிக்டான நிலையில் ஒருவர் உடல்நலக் குறைவு காரணாக வெளியேறினார். மேலும் இந்த வாரம் நடைப்பெற்ற பணப்பெட்டி டாஸ்கில் நடிகர் குமரன் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார். இப்படி மொத்தம் தற்போது 17 போட்டியாளர்களே நிகழ்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த வார இறுதியில் 2 நபர்கள் கட்டாயம் வெளியேற உள்ளனர்.
Also Read… முதல் பட தோல்வி மனதளவில் பாதித்தது… ஓபனாக பேசிய ஃபகத் பாசில் – வைரலாகும் வீடியோ!




பிக்பாஸ் தமிழில் வைல்கார்ட் போட்டியாளர்கள் யார் தெரியுமா?
இந்த நிலையில் கடந்த வாரத்தில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு ஒரு புரோமோ வீடியோவை வெளியிட்டது. அதில் வருகின்ற 04-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு 3 வைல்கார்ட் போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட உள்ளதாக தெரிவித்தனர். அந்த மூன்று போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகைகள் அக்ஷிதா, ஷப்னம் மற்றும் புவியரசு ஆகியோர் இருப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது நாளைய எபிசோட் ஒளிபரப்பான பிறகே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.