எது பெருசுனு அடிச்சிக்கிட்டு.. மீண்டும் வாய்தகராறில் ஈடுபட்ட அஸ்மிதா – சாவன்யா வேலு – வைரலாகும் புரோமோ!
Asmitha And Savanya Fight: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 26 நாட்களை கடந்துள்ளது. இன்னும் ரோப் டாஸ்கில் அஸ்மிதா மற்றும் சாவன்யா வேலு இருவரிடையேயும் கடுமையான வாக்குவாதங்கள் இருக்கும் நிலையில், அது குறித்த புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss season 10). இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் தொடங்கியிருந்த நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்ச்சியானது 4வது வாரத்தின் இறுதியில் உள்ள நிலையில், இதன் மீது நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போது இந்த 4வது வாரத்தில் ரோப் டாஸ்க் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியின் மீது சிறப்பான வரவேற்பு இருக்கிறது. குமரன் – லக்ஷ்மி பிரியா, அஸ்மிதா – சாவன்யா வேலு மற்றும் ஜாவித் – தன்யா போன்ற 6 போட்டியாளர்கள் இந்த டாஸ்கில் இருந்தனர். இதில் ரூ 5 லட்சம் எடுத்துக்கொண்டு குமரன் வெளியேறிவிட்டார். இந்நிலையில் அஷ்மிதா – சாவன்யா மற்றும் ஜாவித் – தன்யா போன்ற போட்டியாளர்கள் மட்டுமே இந்த டாஸ்க்கில் இருக்கின்றனர்.
இதில் அஸ்மிதா மற்றும் சாவன்யா வேலு இருவருக்கும் இடையே சண்டைகள் தொடர்ந்து இருந்துவந்த நிலையில், இன்று (02/10/2026) இவர்களின் சண்டை மேலும் முற்றியது தொடர்பான புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: அடுத்தப் படம் நேரடி ஓடிடி ரிலீஸ் தான் – கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்
அஸ்மிதா மற்றும் சாவன்யா வேலுவிடம் வலுக்கும் சண்டை:
இந்த ரோப் டாஸ்க் ஆரம்பத்திலிருந்தே சாவன்யா மற்றும் அஸ்மிதா இடையே சண்டைகள் இருந்துவந்தது. டாஸ்க் மற்றும் மற்ற செயல்களின்போதே இவர்கள் இருவருக்கும் இடையே மோதல்கள் இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள இந்த புரோமோவில், சாவன்யா வேலு எமோஷனலி வீக்கானவர் என அஸ்மிதா பேசுகிறார்.
இதையும் படிங்க: எல்லாரும் என்ன ட்ரிகெர் பண்ணுறாங்க.. கண்ணீர்விட்ட தன்யா – பிக் பாஸ் புரோமோ!
அதற்கு பதிலளிக்கும்படியாக் சாவன்யா வேலு அவரை மட்டம்தட்ட பேசுவதுபோல இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. தற்போது வெளியான இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 26வது நாளின் முதல் புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day26 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #BiggBossTheTurningPoint #BBTurningPoint #TheTurningPoint #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #VijayTV… pic.twitter.com/c6XvDo6xvG
— Vijay Television (@vijaytelevision) October 2, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டதட்ட 4வது வாரத்தின் இறுதியில் உள்ளது. இந்த வாரத்தில் எவிக்ஷன் ப்ரீ பாஸ் யாரிடம் போகப்போகிறது, மேலும் புதிய வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் யார் என்பது குறித்த ஆர்வம் மக்கள் மத்தியில் உள்ளது. அந்த விதத்தில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 5வது வாரத்தின் தொடக்கம் முதல் சிறப்பாக நடைபெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.