AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பாக்கவே இல்லையே… பிபி ஹோட்டல் டாஸ்கில் நடந்த புதிய மாற்றம் – கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள்!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் இன்று புது ட்விஸ்ட் ஒன்றை பிக்பாஸ் அறிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸில் இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பாக்கவே இல்லையே… பிபி ஹோட்டல் டாஸ்கில் நடந்த புதிய மாற்றம் – கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள்!
பிக்பாஸ் தமிழ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Oct 2026 10:55 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டு இருக்கின்றது. நேற்று 24-வது நாளுக்கான எபிசோடில் டேஞ்சர் சோனில் இருந்த லக்‌ஷ்மி பிரியா, குமரன், தன்யா, ஜாவித், அஸ்மிதா மற்றும் சவ்வன்யாவிற்கு பிக்பாஸ் ஒரு ஆஃபர் கொடுத்தார். அது என்ன என்றால் பணப்பெட்டி டாஸ்க். முந்தைய ஆண்டுகளில் எல்லாம் இந்த பணப்பெட்டி டாஸ்க் சீசனின் இறுதியில் தான் நடத்தப்படும். ஆனால் இந்த முறை 4-வது வாரத்திலேயே நடந்தது போட்டியாளர்களுக்கு மட்டும் அல்லாமல் பார்வையாளர்களுக்கும் சர்ப்ரைஸாக இருந்தது. இந்த நிலையில் 5 லட்சம் ரூபாய் பெட்டியை வைத்துவிட்டு பிக்பாஸ் கேட்கும் போது குமரன் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேற விருப்பம் தெரிவித்தார். அதற்கு அவர் கூறிய காரணம் காண்போரை கண்கலங்க வைத்தது.

இந்த 4-வது வாரம் பிக்பாஸ் வீடு பிபி ஹோட்டலாக மாறி செயல்பட்டு வந்தது. அதில் டேஞ்சர் சோனில் இருக்கும் 6 நபர்களும் அந்த ஹோட்டலின் விருந்தினர்களாகவும் மற்ற போட்டியாளர்கள் ஹோட்டல் ஊழியராகவும் பணியாற்றினர். விருந்தினர்களாக இருந்த போட்டியாளர்கள் நிஜமாவே ஒரு ஹோட்டலில் போய் தங்கி இருந்தது போல பல சலுகைகளை அனுபவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பாக்கவே இல்லையே:

இந்த நிலையில் இன்று 25-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இதுவரை பிபி ஹோட்டலாக இருந்த நிலையில் தற்போது அது பிபி ஹோட்டல் 2.0-வாக மாறியுள்ளது. இதுவரை விருந்தினர்களாக இருந்தவர்கள் ஹோட்டலின் ஊழியர்களாகவும், ஊழியர்களாக இருந்த போட்டியாளர்கள் விருந்தினர்களாகவும் மாறி செயல்பட வேண்டும். இந்த அறிவிப்பைக் கேட்ட போட்டியாளர்கள் துள்ளிக்குதித்து கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸிலிருந்து வெளியேறிய குமரன் – வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… வசூலில் பட்டையை கிளப்பும் சூரியின் மண்டாட்டி – உலக அளவில் இத்தனை கோடிகளா? படக்குழு வெளியிட்ட அப்டேட்

Follow Us