Baththa: மொழியே… விஜய் சேதுபதியின் பத்தா படத்தின் 3வது பாடல் வெளியீடு!
Baththa Movie Mozhiye Song: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் பத்தா. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில், மொழியே என்ற 3வது பாடல் வெளியாகியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடிகராக நடித்துவருகிறார். தமிழ் சினிமாவில் பல்வேறு உச்ச இயக்குநர்களின் இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ளார். அந்த விதத்தில் இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தி டாக்ஸ் (Gandhi Talks). இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதியில் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு பின் 2026ம் ஆண்டில் விஜய் சேதுபதியின் நடிப்பில் 2வது வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் பத்தா (Baththa). இதை இயக்குநர் பாலாஜி தரணீதரன் (Balaji Tharaneetharan) இயக்க, இயக்குநரும், தயாரிப்பாளருமான அட்லீ (Atlee), தனது ஏ ஃபார் ஆப்பிள் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் சிட் ஸ்ரீராம் குரலில் மொழியே (Mozhiye) என்ற 3வது பாடலும் தற்போது வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: ஸ்ட்ரெயிட் அவுட்டா சார்பட்டா.. அன்பில் அவன் படத்திலிருந்து புது பாடல் வெளியானது!
விஜய் சேதுபதியின் பத்தா திரைப்படத்தின் மொழியே பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
It’s time to fall for #Mozhiye! #BaththaThirdSingle out now ♥️
A @SaiAbhyankkar musical
Singer – @sidsriram
Lyricist – @iamKarthikNethaWritten & Directed by #BalajiTharaneetharan#BaththaFromOct1
Makkal Selvan @VijaySethuOffl @jose_lijomol… pic.twitter.com/FeLwK5gjTz
— AforApple (@aforapple_offcl) September 28, 2026
விஜய் சேதுபதியின் பத்தா திரைப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்:
இந்த பத்தா படத்தை இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ள நிலையில், முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை இயக்குனர் அட்லீ தயாரித்துள்ள நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அட்லீயின் தயாரிப்பில் இறுதியாக இந்தியில் பேபி ஜான் என்ற படமானது வெளியானது. இந்த படமானது இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் தமிழில் தயாரித்திருக்கும் முதல் படம்தான் பத்தா. இந்த படத்தில் விஜய் சேதுபதி 80ஸ் கேங்ஸ்டராக நடித்துள்ளார்.
இதையும் படிங்க: இதுக்கு பொய் சீரியஸ்-ஆ.. வெங்கட் பிரபுவின் பதிவுக்கு ரிப்ளை செய்த சிவகார்த்திகேயன்!
அவரின் மனைவியாக லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிறார். இப்படமானது ஒரு ரவுடி ஆள் நடமாட்டம் இல்லாத அறையில் அடைக்கப்பட்ட நிலையில், அந்த தனிமையில் அவர் தனது வாழ்க்கையை எவ்வாறு வாழ்ந்துள்ளோம் என சிந்தித்து மனம் மாறுவதே இப்படத்தின் கதையாக உள்ளது. இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தர சான்றிதழை கொடுத்துள்ளாராம். அதனால 16 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் இப்படத்தை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.