AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jailer 2: ஒன் நேம்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தின் 3வது பாடல் ரிலீஸ் அறிவிப்பு!

One Name Song: தென்னிந்திய சினிமாவில் பிரபலம் இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் நெல்சன் திலீப்குமார். இவரின் இயக்கத்தில் தமிழில் தமிழில் வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படம்தான் ஜெயிலர் 2. அனிருத்தின் இசையில் இப்படத்தின் பாடல்கள் அமைந்துள்ள நிலையில், 3வது சிங்கிள் ரிலீஸ் எப்போது என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Jailer 2: ஒன் நேம்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தின் 3வது பாடல் ரிலீஸ் அறிவிப்பு!
ஒன் நேம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Sep 2026 19:37 PM IST

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar). இவரின் இயக்கத்தில் தமிழில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இவர் சிவகார்த்திகேயன் முதல் முதல்வர் விஜய் (CM Vijay) வரை பல்வேறு நட்சத்திரங்களின் படங்களில் இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவரின் இயக்கத்தில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம்தான் ஜெயிலர் 1 (Jailer 1). இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த படமானது ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) ஹீரோவாக நடிக்க, அவருடன் பல்வேறு பான் இந்திய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் வெளியாக காத்திருக்கிறது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் அமைந்துள்ளது. இதுவரைக்கும் இதிலிருந்து 2 பாடல்கள் வெளியான நிலையில், தற்போது 3வது “ஒன் நேம்” (One Name) என்ற பாடல் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: நானும் சூர்யாவும் இணையும் படம் எப்படி இருக்கும் தெரியுமா? இயக்குநர் ராஜமௌலி சொன்ன விசயம்

ஜெயிலர் 2 படத்தின் ஒன் நேம் என்ற பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட அப்டேட் பதிவு:

ஜெயிலர் 2 படமானது மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில், 3வது பாடலாக ஒன் நேம் பாடல் உள்ளது. இந்த பாடலானது நாளை (29/09/2026) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இதுக்கு பொய் சீரியஸ்-ஆ.. வெங்கட் பிரபுவின் பதிவுக்கு ரிப்ளை செய்த சிவகார்த்திகேயன்!

ஜெயிலர் 2 படத்தின் சென்சார் அப்டேட்:

இந்த ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி, சுராஜ் வெஞ்சாரமூடு, எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் 1 படமானது யு/ஏ தர சென்சாரை பெற்றிருந்த நிலையில், ஜெயிலர் 2 படத்திற்கு ஏ தர சான்றிதழ் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் படக்குழு யு/ஏ தர சான்றிதழையே எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us