ஓடிடி ரிலீஸ் தேதியை உறுதி செய்த பெத்தலேகம் குடும்ப யூனிட் படக்குழு – மகிழ்ச்சியில் ரசிகர்கள்
Bethlehem Kudumba Unit Movie OTT Update | நடிகர் நிவின் பாலி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள படம் பெத்தலேக குடும்ப யூனிட். இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதிலும் இறுதியாக நடிகர் நிவின் பாலி நடிப்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள சினிமாவில் வெளியான படம் பெத்தலேகம் குடும்ப யூனிட். ரொமாண்டிக் காமெடி ட்ராமாவாக உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து தொடர்ந்து தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அது மட்டும் இன்றி இந்தப் படம் கேரள சினிமாவில் வசூல் சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி தற்போது கேரள சினிமாவில் பல ஜாம்பவான்கள் உள்ள நிலையில் அவர்களின் படங்களை விட நிவின் பாலியின் இந்த பெத்தலேகம் குடும்ப யூனிட் படம் அதிக அளவில் வசூல் செய்துள்ளது. கேரளாவில் இதுவரை அதிக வசூல் செய்த படமாக இந்தப் படம் சாதனைப் படைத்துள்ளதையும் நிவின் பாலியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஓடிடி ரிலீஸ் தேதியை உறுதி செய்த பெத்தலேகம் குடும்ப யூனிட் டீம்:
தன்னைவிட வயது சற்று அதிகமாக உள்ள ஆணை கல்லூரியில் படிக்கும் பெண் காதலிக்கிறார். அந்த காதலுக்கு வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அவர்கள் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே இந்தப் படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற அக்டோபர் மாதம் 02-ம் தேதி 2026-ம் ஆண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… நானியின் தி பாரடைஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா? படக்குழு வெளியிட்ட அப்டேட்
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Presenting the JioHotstar official trailer of Bethlehem Kudumba Unit, starring Nivin Pauly, Mamitha Baiju, and Sangeeth Prathap. Streaming exclusively on JioHotstar from October 2.
Watch in Malayalam, Tamil, Telugu, Kannada, and Hindi.@NivinOfficial @MamithaBaiju_… pic.twitter.com/bX5YzJxsoA
— JioHotstar Malayalam (@JioHotstarMal) September 27, 2026
Also Read… உழைக்கும் இனமே உலக ஜெயித்திடும் ஒருநாள் – 12 ஆண்டுகளைக் கடந்தது நடிகர் கார்த்தியின் மெட்ராஸ் படம்



