நிவின் பாலி நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் எப்போது? – அப்டேட் இதோ
Yezhu Kadal Yezhu Malai Movie Release Update | மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தற்போது உருவாகி திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஏழு கடல் ஏழு மலை.
மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் தொடர்ந்து மலையாள சினிமாவில் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டில் இதுவரை நடிகர் நிவின் பாலி நடிப்பில் 3 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி நிவின் பாலி நடிப்பில் பேபி கேர்ள், பிரதிச்சாயா மற்றும் பெத்தலேக குடும்ப யூனிட் ஆகியப் படங்கள் மலையாள சினிமாவில் வெளியாகி உள்ளது. இதில் அனைத்து படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான பெத்தலேக குடும்ப யூனிட் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மலையாள சினிமாவில் தொடர்ந்து படங்கள் வரிசையாக வெளியாகி வரும் நிலையில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் படம் வெளியாக உள்ளது. அதன்படி தமிழ் மொழியில் உருவாகி பல திரைப்பட விழாக்களில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்ற ஏழு கடல் ஏழு மலை படத்தில் நாயகனாக நிவின் பாலி நடித்து உள்ளார்.




நிவின் பாலி நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் எப்போது?
இந்த ஏழு கடல் ஏழு மலை படத்தை இயக்குநர் ராம் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி உடன் இணைந்து நடிகர்கள் அஞ்சலி மற்றும் சூரி இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் உருவாகி சில ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது திரையரங்கு வெளியீட்டு தேதியை முடிவு செய்துள்ளனர். அதன்படி ஏழு கடல் ஏழு மலை படம் வருகின்ற அக்டோபர் மாதம் 01-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… தொடர் வெற்றியை குவித்துவரும் சூரி…. மண்டாட்டி படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம் இதோ!
நடிகர் நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Gear up for an extraordinary journey! #YezhuKadalYezhuMalai in theatres from October 1st!
Written and Directed By #DirectorRam
Produced by @sureshkamatchi @vhouseofficial@yoursanjali @sooriofficial#YezhuKadalYezhuMalai #DirectorRam #YuvanShankarRaja #Soori #Anjali pic.twitter.com/wcqgjX6VvZ
— Nivin Pauly (@NivinOfficial) September 11, 2026
Also Read… நடிகர் ரவி மோகன் பிறந்த நாள் ஸ்பெஷல்… வரிசையாக போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்தும் படக்குழுவினர்!