AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கிடைத்த புது பவர் – இரண்டாவது நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள்!

Bigg Boss Tamil Season 10 | தமிழ் சின்னத்திரையில் தற்போது ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகளை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கிடைத்த புது பவர் – இரண்டாவது நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Sep 2026 11:02 AM IST

தமிழக மக்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் கடந்த 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06-ம் தேதி முதல் தொடங்கியது. முன்பு 9 சீசன்களிலும் ஒவ்வொரு விசயம் மக்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து இருக்கும். ஆனால் இந்த 10-வது சீசன் தொடங்குவதற்கு முன்பே காமென் மேன் என்ற விசயம் மக்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நிகழ்ச்சி தொடங்கிய போது மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அதில் மூன்று போட்டியாளர்கள் காமென் மேன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். மற்ற 16 போட்டியாளர்கள் பல துறைகளில் இருந்து தேர்வாகி போட்டியாளர்களாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கேப்டன் தேர்வை செய்வது முதல் ஒவ்வொரு போட்டியில் முந்தைய சீசன்களில் இருந்து சற்று மாறுபட்டதாக உள்ளது. இதன் காரணமாக பார்வையாளர்களுக்கு இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சலிப்புதட்டவில்லை என்றே கூறவேண்டும்.

Also Read… தமிழ் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடிக்கும் நடிகை.. இந்த கியூட் சிறுமி யார் தெரியுமா?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கிடைத்த பவர்:

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நேற்று இரண்டாம் நாளிற்கான எபிசோட் வெளியானது. அதில் ராட்சச பொம்மையின் வாயில் சரியாக குறிப்பிட்ட தூரத்தில் இருந்து உணவை எரிந்தவர்களுக்கு பாய்ண்ட்ஸ் கொடுக்கப்பட்டது. அந்த பாய்ண்ட்ஸ்கள் வைத்து வீட்டில் சில பவர்களை போட்டியாளர்கள் ஏலத்தில் எடுக்க முடியும் என்று பிக்பாஸ் அறிவித்தார். அதன்படி வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அவினாஸ், பிரித்வி உட்பட சிலர் அந்த ஏலத்தில் சில பவர்களை பெற்றுள்ளனர். இது இந்த வாரத்தில் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… முதல் நாளே இரண்டு அணிகளாக பிரிந்த பிக்பாஸ் போட்டியாளர்கள்… வெடிக்கும் பிரச்சனைகள்!

Follow Us