Actor Black Pandi Profile: பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் நுழைந்த அங்காடி தெரு பட நடிகர் ப்ளாக் பாண்டி – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி இன்று தொடங்கி உள்ள நிலையில் இந்தப் போட்டியில் சின்னத்திரையில் உள்ள பிரபலங்கள் மட்டும் இன்றி வெள்ளித்திரையில் உள்ள பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சின்னத்திரையில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து தமிழக மக்களிடையே பிரபலமானவர் ப்ளாக் பாண்டி. அதனைத் தொடர்ந்து சின்னத்திரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் ப்ளாக் பாண்டிக்கு கடந்த 2010-ம் ஆண்டு இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித் தெரு என்ற படத்தில் நாயகின் நண்பனாக ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் இவரது காமெடி காட்சிகள் தற்போதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அங்காடித் தெரு படத்தை தொடர்ந்து அவர் பலப் படங்களில் நடித்து உள்ளார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர் ப்ளாக் பாண்டி இருதியாக தமிழ் சினிமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான பூக்கி என்ற படத்தில் நட்டித்து இருந்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தாலும் பெரிய அளவில் இவருக்கு கதாப்பாத்திரம் இல்லை என்றே கூறவேண்டும்.




பிக்பாஸில் நுழைந்த அங்காடி தெரு பட நடிகர் ப்ளாக் பாண்டி:
இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் தமிழக மக்களிடையே தனது கவனத்தை கொடுக்க வந்துள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு தன்னை தற்போது இருக்கும் இளம் தலைமுறையினருக்கு தெரியவில்லை. வாழ்க்கையில் ஒரு அப்டேட் வேண்டும் என்பதற்காக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ஏஜிஎஸ் என்டேர்டைமென்ட் நிறுவனத்தின் கீழ் புது படத்தில் இணைத்த ஜெய் மற்றும் பிரியங்கா மோகன்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
பிக் பாஸ் இல்லத்தில் #BlackPandi | #NOWSHOWING | Bigg Boss Tamil Season 10 #GrandLaunch
Bigg Boss Tamil Season 10 #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason10 #TuneInNow #Ottikichi #VijaySethupathi #CarniVizha #Bigg… pic.twitter.com/KcnZS2joHl
— Vijay Television (@vijaytelevision) September 6, 2026
Also Read… Rajisha Vijayan: சர்தார் 3 படத்தில் நான்தான் மெயின்.. கலகலப்பாக ஹின்ட் கொடுத்த நடிகை ரஜிஷா விஜயன்!