AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கொடியை கொடுங்கள் கோட்டையை பிடிப்போம் – ரவி மோகன் ரசிகர் மன்ற விழாவில் பரபரப்பு

Ravi Moahn : நடிகர் ரவி மோகனின் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் சந்திப்பு விழா செப்டம்பர் 5, 2026 இன்று நடைபெற்றது. விழாவில் பேசிய ரசிகர் மன்ற நிர்வாகி கொடியை கொடுங்கள் , கோட்டையை பிடிப்போம் என்று பேசினார். இதனையடுத்து அவர் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வியை எழுப்பியது.

கொடியை கொடுங்கள் கோட்டையை பிடிப்போம் – ரவி மோகன் ரசிகர் மன்ற விழாவில் பரபரப்பு
ரவி மோகன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Sep 2026 15:28 PM IST

நடிகர் ரவி மோகனின் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் சந்திப்பு விழா செப்டம்பர் 5, 2026 இன்று நடைபெற்றது. விழாவில் பேசிய ரசிகர் மன்ற விழா கொடியை கொடுங்கள், கோட்டையை பிடிப்போம் என்று பேசியது பரபரப்பாகியது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய ஆட்சியை பிடித்தார். இதற்கு முன்னதாக அவர் தனது தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி, உன்னால் முடியும் என்ற பிரத்யேக கொடியை அறிமுகப்படுத்தினார்.

ரவி மோகன் ரசிகர் மன்ற விழாவில் பரபரப்பு

அவரைப் போல நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது ரசிகர் மன்றத்தின் சார்பில் கொடியை அறிமுகப்படுத்திார். இது அவர் அரசியலுக்கு வருவதை முன்னோட்டமாக பார்க்கப்பட்டது. தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர் மன்றம் சார்பாக நடைபெற்ற விழாவில் பேசிய தனுஷ் , அரசியலுக்கு வருவதை மறைமுகமாக அறிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அரசியலில் கால் வைக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது.

இதையும் படிக்க : Priyanka Mohan: சிலம்பரசனின் அரசன் படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரியங்கா மோகன்?

இந்த நிலையில் செப்டம்பர் 5, 2026 இன்று ரவி மோகன் ரசிகர் மன்றம் சார்பில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் ரவி மோகன் குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடினார். இந்த நிகழ்வில் பேசிய நிர்வாகி ஒருவர், அண்ணா குரல் கொடுங்கள், தமிழகத்தில் இருந்து அலையாய் வருவோம், கொடியை கொடுங்கள், உங்கள் ரசிகர்கள் கோட்டையை பிடிப்போம் என்று பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அவர் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த நடிகர் ரவி மோகன், நடிகர்கள் ரசிகர்களை சந்தித்தாலே அதை அரசியலாக பார்க்கிறார்கள். தற்போது நான் சினிமாவில் மட்டுமே இருக்கிறேன். நல்லது செய்ய பதவி தேவையில்லை. தேவைப்பட்டால் அதை எடுத்துக்கொண்டும் செய்யலாம். தோல்விகள் தான் வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொடுக்கும் என்பதால் ரிஸ்க் எடுக்க தயங்க வேண்டாம். சில வருடம் உங்களைச் சந்திப்பது மிஸ் ஆகிவிட்டது. நான் உங்களை மிஸ் செய்தாலும், நீங்கள் என்னைக் காண வந்திருக்கிறீர்கள். இங்கே குடும்பமாக என்னைக் காண வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : ரஜினிகாந்தின் தர்மன் பட செகண்ட் ஷெட்யூல் ஓவர் – வைரலாகும் வீடியோ!

கடந்த சில ஆண்டுகளாக உங்களை நேரில் சந்திக்க முடியாமல் போனதை நினைத்து நான் ரொம்பவே வருத்தப்பட்டேன். ஆனா, நான் உங்களை பார்க்க வரவில்லை என்றாலும், நீங்க எல்லாரும் தேடி வந்து என்னை பார்க்க வந்திருக்கீங்க. ஒரு சொந்த குடும்பமா அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை பார்க்க இங்க வந்திருப்பதை பார்க்கும்போது எனக்கு வார்த்தைகளே வரல, அவ்வளவு சந்தோஷமா இருக்கு என்றார்.

Follow Us