AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND W vs PAK W: ஸ்மிருதியும் ஹர்மன்பிரீத்தும் சரித்திரம் படைப்பார்களா..? காத்திருக்கும் 5 சாதனைகள்!

Women Asia Cup 2026 IND W vs PAK W: இந்திய அணி தனது 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று, அரையிறுதிப் போட்டியில் ஏற்கனவே இடத்தைப் பிடித்துவிட்டது. இதற்கிடையில், பாகிஸ்தான் அணியும் இன்றைய போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து இறுதி நான்கு அணிகளில் ஒன்றைப் பிடிக்க முனையும். இரு நாடுகளை சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் போன்ற வீராங்கனைகள் மீது அனைவரின் பார்வையும் இருக்கும்.

IND W vs PAK W: ஸ்மிருதியும் ஹர்மன்பிரீத்தும் சரித்திரம் படைப்பார்களா..? காத்திருக்கும் 5 சாதனைகள்!
ஸ்மிருதி மந்தனா - ஹர்மன்ப்ரீத் கவுர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Sep 2026 16:17 PM IST

2026 மகளிர் ஆசியக் கோப்பை தொடரின் (2026 Womens Asia Cup) இந்தியா-பாகிஸ்தான் போட்டி (IND W vs PAK W) இன்று அதாவது 2026 செப்டம்பர் 5ம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்குத் தொடங்கும். இந்திய அணி தனது 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று, அரையிறுதிப் போட்டியில் ஏற்கனவே இடத்தைப் பிடித்துவிட்டது. இதற்கிடையில், பாகிஸ்தான் அணியும் இன்றைய போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து இறுதி நான்கு அணிகளில் ஒன்றைப் பிடிக்க முனையும். இரு நாடுகளை சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், நஷ்ரா சந்து மற்றும் கேப்டன் பாத்திமா சனா போன்ற வீராங்கனைகள் மீது அனைவரின் பார்வையும் இருக்கும்.

தாய்லாந்துக்கு எதிரான போட்டியில், நஷ்ரா தனது 4 ஓவர் பந்துவீச்சில் வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி பல சாதனைகளுக்கு வித்திடக்கூடும், ஏனெனில் குறிப்பாக இந்திய வீராங்கனைகள் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் தருவாயில் உள்ளனர்.

ALSO READ: பாகிஸ்தானை அடுத்த போட்டியில் எதிர்கொள்ளும் இந்திய மகளிர்.. எப்போது, எங்கு காணலாம்?

டி20 போட்டிகளில் அதிக ரன்கள்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த சாதனை நியூசிலாந்தின் சூசி பேட்ஸிடம் உள்ளது. அவர் 4,758 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்மிருதி மந்தனா இதுவரை 4,681 ரன்கள் எடுத்துள்ளார். சூசி பேட்ஸின் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 78 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.

  • 4758 ரன்கள் – சூசி பேட்ஸ்
  • 4681 ரன்கள் – ஸ்மிருதி மந்தனா

டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் (இந்தியாவுக்காக)

டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய சாதனையை ஸ்மிருதி மந்தனா ஏற்கனவே தன்வசம் வைத்துள்ளார். ஸ்மிருதி இதுவரை 95 சிக்ஸர்களை அடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக ஸ்மிருதி மந்தனா மேலும் ஆறு சிக்ஸர்களை அடித்தால், மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெறுவார்.

  • 95 சிக்ஸர்கள் – ஸ்மிருதி மந்தனா
  • 89 சிக்ஸர்கள் – ஹர்மன்பிரீத் கவுர்

பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள்

டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர் மிதாலி ராஜ் ஆவார். இதுவரை தனது வாழ்க்கையில் 315 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக 307 ரன்கள் எடுத்த ஸ்மிருதி மந்தனா, இந்தச் சாதனையை முறியடிக்க இன்னும் 9 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த மிதாலி ராஜின் சாதனையை ஸ்மிருதி ஏற்கனவே முறியடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 315 ரன்கள் – மிதாலி ராஜ்
  • 307 ரன்கள் – ஸ்மிருதி மந்தனா

கேப்டனாக 150வது போட்டி

இன்று கேப்டனாக களமிறங்கும் ஹர்மன்பிரீத் கவுர் சரித்திரம் படைக்க உள்ளார். சர்வதேச அளவில் 150 டி20 போட்டிகளுக்குத் தலைமை தாங்கிய உலகின் முதல் கேப்டன் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெறுவார். இது கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுரின் 150வது போட்டியாகும்.

ALSO READ: ஆசியக் கோப்பையில் இன்று பாகிஸ்தானுடன் மோதல்.. இந்திய அணியின் ஹெட் டூ ஹெட் விவரம்!

ஷெஃபாலி வர்மாவும் சரித்திரம்:

மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில், இதுவரை ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகிய 2 மட்டுமே 3000 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்துள்ளனர். ஷெஃபாலி வர்மா இந்த மைல்கல்லை எட்டுவதற்கு இன்னும் 7 ரன்கள் மட்டுமே தேவை. ஷெஃபாலி வர்மா இதுவரை 2993 ரன்கள் எடுத்துள்ளார்.

  • 4681 ரன்கள் – ஸ்மிருதி மந்தனா
  • 4231 ரன்கள் – ஹர்மன்பிரீத் கவுர்
  • 2993 ரன்கள் – ஷஃபாலி வர்மா

Follow Us