பாரா ஆசிய விளையாட்டு: பதக்கங்களை குவித்த தமிழர்கள் – ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்
Asian Para Games 2026 : ஜப்பானில் நடைபெற்று வரும் 5வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவித்த சோலைராஜ் தர்மராஜ், நவீன் சிவகுமார், மனிஷா ராமதாஸ் ஆகிய தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டுத் தெரிவித்துள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 22 : ஜப்பானில் நடைபெற்று வரும் 5வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸுக்கு, தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சமும், தடகளத்தில் ஆண்கள் நீளம் தாண்டுதல் T64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சோலைராஜ் தர்மராஜிற்கு ரூ. 75 லட்சமும் பேட்மிண்டன் விளையாட்டில், ஆண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நவீன் சிவகுமாருக்கு ரூ.30 லட்சமும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் (CM Joseph Vijay) அறிவித்துள்ளார். .
பதக்கங்களை குவித்த தமிழர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் விஜய், ஜப்பானில் நடைபெற்றுவரும் 5வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.




இதையும் படிக்க : ரூ.15 லட்சத்தை பறிகொடுத்த கேரள மீன் வியாபாரி.. சிறை காவலர் உள்பட இருவரை தூக்கிய போலீஸ்.. கோவையில் பரபர சம்பவம்!
வீராங்கனை மனிஷா ராமதாஸின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் பெறும் இரண்டாவது பதக்கம் இதுவாகும். அவர் எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் பதிவு
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளத்தில் ஆண்கள் நீளம் தாண்டுதல் T64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீரர் சோலைராஜ் தர்மராஜ் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
திறமையும், உறுதியும் இருந்தால் எத்தகைய சவால்களையும் கடந்து சாதிக்க முடியும் என்பதற்கு அவரது இம்மகத்தான வெற்றி சான்றாகத் திகழ்வதோடு, தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையும், ஊக்கத்தையும் அளிப்பதாகவும் அமைந்துள்ளது. எதிர்காலத்திலும் அவர் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!
#CMJosephVijay
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 22, 2026
அதே போல பாரா ஆசிய விளையாட்டுப்போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், ஆண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் நவீன் சிவகுமாருக்கு ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
மேலும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளத்தில் ஆண்கள் நீளம் தாண்டுதல் T64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீரர் சோலைராஜ் தர்மராஜிற்கு அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க : 2027 ஆம் ஆண்டு 24 நாட்கள் விடுமுறை… – வெளியானது அரசு பொது விடுமுறைப் பட்டியல்
மேலும், திறமையும், உறுதியும் இருந்தால் எத்தகைய சவால்களையும் கடந்து சாதிக்க முடியும் என்பதற்கு அவரது இம்மகத்தான வெற்றி சான்றாகத் திகழ்வதோடு, தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையும், ஊக்கத்தையும் அளிப்பதாகவும் அமைந்துள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மனிஷா ராமதாஸ், இந்தியாவின் முன்னணி பாரா பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவர். 2024 பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகளில், பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று கவனம் ஈர்த்தவர்.