AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்.. தாயிடம் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை.. துப்பு துலங்குமா!

CBCID Question Gingee Girl Mother : விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமி காணாமல் சென்று 10 நாள்கள் ஆகும் நிலையில், துப்பு எதுவும் துலங்காததால் சிறுமியின் தாய்யிடம் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல, அடுத்தக்கட்ட விசாரணையும் நடக்க உள்ளது.

செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்.. தாயிடம் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை.. துப்பு துலங்குமா!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Oct 2026 16:07 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல் போன சிறுமி தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் தாயிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த தம்பதியின் மகள் 7 வயது சிறுமி. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 12- ஆம் தேதி சிறுமி தனது வீட்டில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மற்றும் மாயமான சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால், சிறுமி காணாமல் சென்று 10 நாட்கள் ஆவதால் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

சிபிசிஐடி வசம் மாற்றப்பட்ட வழக்கு விசாரணை

இதன் காரணமாக, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குனர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். இதில், சிபிசிஐடி போலீசார் புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்து, காணாமல் போன சிறுமியின் தாயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் உள்ளூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், அதில் எந்த விதமான துப்பும் கிடைக்கவில்லை.

மேலும் படிக்க: 7 வயது சிறுமி காணாமல் போன விவகாரம்.. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு..

சிறுமியை கண்டுபிடிக்க 8 தனிப்படைகள்

இதன் காரணமாக சிறுமியை கண்டுபிடிப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடிக்கி விடப்பட்டது. அதன்படி, சிறுமியின் வீடு மற்றும் சந்தேகிக்கப்படும் இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி தனிப்படை போலீசார் தீவிர ஆய்வுக்கு உள்படுத்தி உள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் சந்தேகத்துக்கிடமான வகையில் பதிவாகி இருந்த 600 செல்போன்கள் உரையாடல்களை போலீசார் கண்டறிந்த நிலையில் அது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறுமியின் தாயிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை

இருந்தாலும், சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆன நிலையில் வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் இந்த விசாரணை சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது. அதன்படி, விழுப்புரம் போலீசார் சிறுமி மாயமான வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: மாயமான 1 வயது குழந்தை.. 25 நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை.. ராணிப்பேட்டையில் சோகம்!!

Follow Us