AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புழல் சிறையில் அடுத்தடுத்து கைதி தப்பிய விவகாரம்.. உதவி ஜெயிலர்-7 வார்டன்கள் சஸ்பெண்ட்.. சிறைத்துறை டிஜிபி உத்தரவு!

Puzhal Prison Assistant Jailer Suspend: சென்னை புழல் சிறையில் இரு கைதிகள் அடுத்தடுத்து தப்பி ஓடிய நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி உதவி ஜெயிலர் மற்றும் 7 சிறை வார்டன்களை சஸ்பெண்ட் செய்தி சிறைத்துறை டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

புழல் சிறையில் அடுத்தடுத்து கைதி தப்பிய விவகாரம்.. உதவி ஜெயிலர்-7 வார்டன்கள் சஸ்பெண்ட்.. சிறைத்துறை டிஜிபி உத்தரவு!
புழல் மத்திய சிறை.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Oct 2026 14:45 PM IST

சென்னை மாவட்டம், புழல் பகுதியில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள், 1000- க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் பெண்கள் சிறையில் 150- க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையை சுற்றி கைதிகள் தப்பித்து வெளியே செல்லாத வகையிலும், வெளியில் இருந்து யாரும் அத்துமீறி உள்ளே நுழையாத வகையிலும் 3 அடுக்கு ராட்சத மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சுவரின் மேல் பகுதியில் மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புழல் சிறையில் நேபாளம் நாட்டை சேர்ந்த சுதீப் ( 23 வயது) என்ற இளைஞர் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.

புழல் சிறையில் இருந்து தப்பிய இரு கைதிகள்

அவர், சென்னை பாடி பகுதியில் தங்கி இருந்து திருட்டில் ஈடுபட்ட வந்து நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஜெ. ஜெ. நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை கைதி சுதீப் மாலை உணவு சாப்பிடுவதற்கு வரவில்லை. இதை அறிந்த சிறை வார்டன்கள் மற்றும் சக கைதிகள் அவரது அறையில் தேடிப் பார்த்தபோது அவர் அங்கு இல்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த வார்டன்கள் மற்றும் போலீசார் இதுகுறித்து புழல் போலீசில் புகார் அளித்தனர்.

மேலும் படிக்க: புழல் சிறையில் தப்பியியோடிய 2 கைதிகளில் ஒருவர் மடக்கி பிடிப்பு.. மற்றொரு கைதிக்கு வலைவீச்சு!!

3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை

அந்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் வசந்த ராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இதே போல, சென்னை, திருமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் ( 26 வயது) என்பவரும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவரும் மதிய உணவு சாப்பிட வராத நிலையில் தேடிப் பார்த்தபோது அவரும் மாயமாகி இருந்தார். இது குறித்து புழல் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

உதவி ஜெயிலர் மற்றும் 7 வார்டன்கள் சஸ்பெண்ட்

இதில், கைதி சுதீசை போலீசார் இன்று வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுரேஷை தேடி வருகின்றனர். இந்த நிலையில், புழல் சிறையில் இருந்து இரு கைதிகள் அடுத்தடுத்து தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் 6 சிறை காவலர்கள் மற்றும் ஒரு உதவி ஜெயிலர் என 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க: சிறையில் அடைக்கப்பட்டும் திருந்தவில்லை.. பாளையங்கோட்டை சிறை அதிகாரி-வார்டன் மீது தாக்குதல்.. நெல்லையில் பெரும் பரபரப்பு!

Follow Us