மகளிர் குழு கடனால் வந்த வினை? மாமனார்- மாமியார் திட்டியதால் விபரீதம்.. ராமநாதபுரத்தில் 2 வயது மகளை கொன்று தாய் தற்கொலை!
Paramakudi Crime : ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கியதை மாமனார் மற்றும் மாமியார் கண்டித்ததால் மன வேதனை அடைந்த மருமகள் தனது குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள மோகனூர் வட்டம், சின்ன நாகாட்சி கிராமத்தில் வசித்து வருபவர் நீதி ராஜன் ( 28 வயது). இவரது மனைவி பிரியங்கா ( 25 வயது). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 வயதில் திவ்யா என்ற மகள் இருந்து வருகிறார். நீதி ராஜன் சென்னையில் 108 அவசர ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம் ஆகும். இந்த நிலையில், பிரியங்கா தனது கணவர் நீதி ராஜனுக்கு தெரியாமல் மகளிர் சுய உதவி குழு மூலமாக ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
மகளிர் குழு கடனால் வந்த வினை
இந்த கடனுக்கு வாரம் ஒரு முறை பிரியங்கா வட்டி செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இந்த வாரத்துக்கான வட்டி தொகையை வசூல் செய்வதற்காக மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த நபர்கள் பிரியங்காவின் வீடு அமைந்துள்ள சோமனூர் கிராமத்துக்கு சென்றுள்ளனர். அப்போது, பிரியங்கா வாங்கிய கடன் தொடர்பான விவரம் அவரது குடும்பத்துக்கு தெரிய வந்தது. இதில், பிரியங்கா மற்றும் அவரது மாமனார், மாமியார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கடலூரில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து.. தடுப்பு கட்டையில் மோதி பயங்கர விபத்து.. டிரைவர் செய்த செயலால் விபரீதம்!




மகளை கொலை செய்து தூக்கில் தொங்கிய தாய்
இதில், மருமகள் பிரியங்கா மன வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை பிரியங்கா தனது 2 வயது குழந்தை திவ்யாவின் மூக்கு மற்றும் வாயை பொத்தி மூச்சை திணறடித்து கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டின் மேல் மாடிக்கு சென்ற பிரியங்கா மின்விசையில் கயிறால் தூக்கு போட்டு தற்கொல செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரது அறையின் காது வெகு நேரமாக திறக்காததை அறிந்த மாமனார் மற்றும் மாமியார் அறையின் கதவை தட்டி உள்ளனர்.
சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
கதவு திறக்கப்படாததால் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பிரியங்கா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவரது அருகில் குழந்தை திவ்யாவும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திருமணமான 8 மாதத்தில் சோகம்.. கணவர் வெளியே அழைத்த செல்லாததால் பெண் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் நிகழ்ந்த சம்பவம்!