AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்? தூத்துக்குடி- திருநெல்வேலி மக்களுக்கு எச்சரிக்கை…!

Thoothukudi Heavy Rain Warning : தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாள்கள் மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கரையோர மக்களுக்கு ஆட்சியர் விஷு மகாஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்? தூத்துக்குடி- திருநெல்வேலி மக்களுக்கு எச்சரிக்கை…!
தாமிரபரணி ஆறு (கோப்புப்படம்).
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 21 Oct 2026 07:05 AM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், இலங்கையை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு பருவமழை அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், வட மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் (Thamirabarani River) நீர் பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வுத் துறையின் சென்னை மண்டல மையத்தால் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு நிறைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு

இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றின் கரை ஓரம் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கோரம்பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க: மூதாட்டியை கொன்று நகை கொள்ளை… போலீஸுடன் இணைந்து குற்றவாளியை தேடிய கொலையாளி.. திருவாரூரில் நிகழ்ந்த சம்பவம்!

தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

அவர்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ, ஆற்றின் கரை ஓர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மாவட்டத்தில் மழை நீர் தேங்கக் கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மருதூர் அணைக்கட்டு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை உடனுக்குடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க உதவி எண்

இதே போல, நகரப் பகுதிகளில் தேங்கும் மழை நீரை உடனுக்குடன் அகற்றவும், அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ள பாதிப்புகள் தொடர்பாகவும், உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் உடனடியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 1077 மற்றும் செல்போன் எண் 7092300044- இல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: திருச்செந்தூர் முருகன் கோயில் சொத்தில் அர்ச்சகர் கைவரிசை.. காட்டிக் கொடுத்த 3- ஆம் கண்.. அடுத்து நடந்த தரமான சம்பவம்!

Follow Us