AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கனமழை எதிரொலி… சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

Chennai Including 4 Districts School Holiday : தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை உள்பட 5 மாவட்டங்க ளில் செயல்படும் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று புதன்கிழமை ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளனர் .

கனமழை எதிரொலி… சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 21 Oct 2026 06:43 AM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று செவ்வாய்க்கிழமை இரவும் முதல் சென்னை உள்பட பல்வேறு கடலோர மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த மழை இன்று புதன்கிழமை ( அக்டோபர் 21- ஆம் தேதி) அதிகாலையும் கனமழை தொடர்ந்து பெய்து வந்தது. இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலனும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆட்சியர் மு. வீரப்பனும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆட்சியர் கவிதாவும் விடுமுறை அறிவித்துள்ளனர்.

சென்னையில் மழை நீர் அகற்றும் பணிகள்

சென்னையில் வேளச்சேரி, திருவான்மியூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் அதிக அளவு தேங்கியுள்ளது. இதே போல, சுரங்கப் பாதைகளிலும் மழை நீர் அதிகளவு தேங்கி உள்ளது. இந்த மழை நீரை பொதுப்பணித்துறை ஊழியர்கள் மோட்டார் பம்பு செட் மூலமாக வெளியேற்றி வருகின்றனர். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் பொதுமக்கள் தேவை இன்றி வெளியில் வர வேண்டாம் என்று பொதுவான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்தடுத்து சிக்கும் போதைப்பொருள்கள்.. திருநெல்வேலியில் 600 மாத்திரைகள் பறிமுதல்.. 4 பேரை மடக்கி பிடித்த போலீஸ்!

மாணவர்கள் நலன் கருதி விடுமுறை அறிவிப்பு

அத்துடன், மழை நீர் தேங்கிய பகுதிகளில் வாகனங்களிலோ அல்லது நடந்தோ செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது மேற்கண்ட 5 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது, சரஸ்வதி, ஆயுத பூஜை மற்றும் வார விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊர் சென்ற நிலையில், மீண்டும் வெளியூர் திரும்பி வருகின்றனர்.

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று புதன்கிழமை பள்ளிகள் செயல்பட இருந்த நிலையில், கனமழையின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் 3 நாள்களுக்கு பருவமழை அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ஆளுநர் மாளிகை முதல் முதல்வர் வீடு வரை வெடிகுண்டு மிரட்டல்.. 34 வழக்குகளில் தொடர்புடைய தமிழக இளைஞர்.. கேரள போலீஸ் அதிரடி கைது!

Follow Us