வடகிழக்கு பருவமழை: சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்! ரிப்பன் மாளிகையில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு
ரிப்பன் கட்டட வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்புப் பணிகளை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மழைக்காலப் பாதிப்புகளைத் தடுக்க அனைத்துத் துறைப் பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
அக்டோபர் 20, 2026: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், ராயபுரம் மண்டலத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கைப் பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.
கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு!
இன்று (20.10.2026) மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்–5, வார்டு–58, ஜோதி வெங்கடாசலம் தெருவில் மரக்கிளைகளை அகற்றும் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை வடக்கு வட்டார துணை ஆணையர் திருமதி ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., அவர்களுடன் இணைந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
#GreaterChennaiCorporation #NammaChennai #MonsoonPreparedness #ChennaiRains
@CMOTamilnadu | @TNDIPRNEWS| @MawsTamilNadu
— Greater Chennai Corporation (@chennaicorp) October 20, 2026
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ரிப்பன் கட்டட வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்புப் பணிகளை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மழைக்காலப் பாதிப்புகளைத் தடுக்க அனைத்துத் துறைப் பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் படிக்க: ரூ.100 கோடி மெத்தபெட்டமைன் கடத்தல் கும்பலுடன் தொடர்பு.. இரு காவலர்கள் பணியிட மாற்றம்.. நாகை காவல்துறையில் பரபரப்பு!
வடசென்னையில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை
முன்னதாக, ராயபுரம் மண்டலம், 58-வது வார்டுக்கு உட்பட்ட ஜோதி வெங்கடாசலம் சாலையில் விழும் நிலையில் தாழ்வாக இருந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியை அமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து, அழகப்பா சாலையில் 100 ஹெச்.பி. திறன் கொண்ட நீர் உறிஞ்சும் மோட்டார்கள் மூலம் மழைநீர் வடிகால்களில் அதிக அளவில் தேங்கியிருந்த நீரை வெளியேற்றும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
ஆரஞ்சு எச்சரிக்கை – மாநகராட்சி தீவிர கண்காணிப்பு:
அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்தடுத்த நாட்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: மழைக்கான ஹாட்ஸ்பாட்டாக மாறும் சென்னை.. இன்று இரவு முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் – வெதர்மேன் பிரதீப் ஜான்..
இதன் காரணமாக சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கவும், தேங்கிய நீரை விரைந்து வெளியேற்றவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. மழைநீர் தேங்கக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அப்பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.