AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.100 கோடி மெத்தபெட்டமைன் கடத்தல் கும்பலுடன் தொடர்பு.. இரு காவலர்கள் பணியிட மாற்றம்.. நாகை காவல்துறையில் பரபரப்பு!

Nagai Two Police Transferred : நாகப்பட்டிணத்தில் ரூ. 100 கோடி மெத்தபெட்டமைன் கடத்தல் வழக்கில் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த ஒரு பெண் மற்றும் ஆண் காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

ரூ.100 கோடி மெத்தபெட்டமைன் கடத்தல் கும்பலுடன் தொடர்பு.. இரு காவலர்கள் பணியிட மாற்றம்.. நாகை காவல்துறையில் பரபரப்பு!
பணியிடமாற்றம் செய்யப்பட்ட இரு காவலர்கள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 20 Oct 2026 18:30 PM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி பூபாலன் தொடர்புடைய இடத்தில் இருந்து ரூ.100 கோடி மதிப்புடைய 137 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருளை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்திருந்தது. இது தொடர்பாக, தவெக நிர்வாகி பூபாலன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், தொடர்புடையதாக 2 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் போதை பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள கடலோர கிராமங்களில் தடை செய்யப்பட்ட செயற்கை போதைப் பொருளான கிரிஸ்டல் மெத்தபெட்டமைனை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளன. இதன் மொத்த எடை சுமார் 137 கிலோ கிராம் ஆகும்.

இலங்கைக்கு கடத்த முயன்ற போதைப் பொருள்

உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், கடந்த அக்டோபர் 26, 27- ஆம் தேதிகளில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டனர். இதன் மூலம் போதை பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்றதாக சந்தேகப்படும் வகையில் ஒரு கடலோர போதை பொருள் கடத்தல் கும்பலை கைது செய்தனர். இந்த போதை பொருள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில், கைப்பற்றப்பட்ட சட்ட விரோத போதை பொருட்களின் சந்தை மதிப்பு ரூ. 100 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னை விமான நிலையத்தில் வேலை… ரூ.23 லட்சத்தை சுருட்டிய விமான நிலைய முன்னாள் அதிகாரி.. போலீசார் எடுத்த நடவடிக்கை!

ரூ. 100 கோடி மதிப்புடைய மெத்தபெட்டமைன்

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 5 கிலோ எடை கொண்ட 27 வெள்ளி தகடு பொட்டலங்கள் அடங்கிய 6 டபிள் பைகள் மீட்கப்பட்டிருந்தது. அந்த பொட்டலங்களில் மெத்தபெட்டமைன் என சந்தேகிக்கப்படும் ஒரு வெள்ளை நிற படிகப்பொருள் இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரே இடத்தில் ரூ. 10 லட்சம் ரொக்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக், கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

ஒரு பெண் – ஒரு ஆண் காவலர் மீது நடவடிக்கை

இந்த நிலையில் நாகையில் மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தல் குற்றவாளி சுகனுடன் தொடர்பில் இருந்த வேளாங்கண்ணி காவல் துணை கண்காணிப்பாளரின் கார் ஓட்டுநர் சிவக்குமார் மற்றும் வேளாங்கண்ணி காவல் நிலைய காவலர் சங்கீதா ஆகியோர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தை உலுக்கும் மெத்தபெட்டமைன் விவகாரம்.. சென்னையில் சிக்கிய 3 பேர்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

Follow Us