திமுக அரசு செய்த தவறுகளை செய்யும் தவெக அரசு.. எதை கூறுகிறார் வீ த லீடர்ஸ் அண்ணாமலை!
We The Leaders Annamalai Latest Speech : திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்த தவறை தமிழக வெற்றிக் கழக அரசும் செய்து வருவதாக வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்து உள்ளார் .
கோவையில் விஜயதசமியையொட்டி, தனியார் பள்ளியில் நடந்த பெற்றோர்களுக்கான சிறப்பு கருத்தரங்கத்தில் வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் கல்வி திறன், கற்றல் திறன் குறைந்து வருகிறது. 10, 12- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை எண்ணிக்கை குறைந்துள்ளது. இதில், மாணவர்களின் எண்ணிக்கை 9 சதவீதமும், மாணவிகளின் எண்ணிக்கை 6 சதவீதமும் குறைந்துள்ளது. தமிழகத்தில் 50 சதவீத மாணவர்கள் உயர்ந்த விக்கி செல்கின்றனர். தற்போது, அந்த விகிதமும் குறைந்து வருகிறது. இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகள் அதிக மொழிகளை கற்க விரும்புகின்றனர். மத்திய அரசு சில திட்டங்களை கொண்டு வந்த போதும் தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்தது.
மொழிகளை கற்க தடை ஏற்படுத்தும் தமிழக அரசு
ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளை கற்பிப்பதில் ஏற்பட்ட மாற்றங்களால் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பல்வேறு பிரச்சனை ஏற்பட்டது. சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள் அதிக முறைகளை கற்க அனுமதிக்க வேண்டும் என்றும், மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் இது தொடர்பாக கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ஆங்கிலத்துடன் பிற மொழிகளை கற்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு மொழிகளை கற்பதற்கு தடைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 1960 முதல் 1970- ஆம் ஆண்டு வரை இருந்த சூழல் தற்போது இல்லை.
மேலும் படிக்க: தவெக-வுக்கு குவிந்த ரூ.13.3 கோடி நன்கொடை.. 99% நிதியை அள்ளி கொடுத்த 2 அமைச்சர்கள்.. யார் அந்த கொடை வள்ளல்கள்!




சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும்
உலகத்தரம் வாய்ந்த கல்வி வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு வெளிநாட்டு மொழிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதும், மாநில அரசு இந்திய மொழிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதும் தவறு ஆகும். பல்வேறு நாடுகளில் குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதே போல, இந்தியாவிலும் 8, 10 வயது குழந்தைகள் கூட இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூழ்கி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கவனம் செலுத்தி பரிசீலனை செய்ய வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிப்பதற்கான நேரம் வந்துள்ளது.
திமுக அரசு செய்த தவறுகளை தவெக அரசும் செய்கிறது
படிப்பதற்கு கூகுள் போன்ற தளங்களை பயன்படுத்த அனுமதிக்கலாம், அதே வேளையில் சமூக வலைதளங்கள் பல்வேறு சீர்கேடுகளை ஏற்படுத்து வருவதையும் அண்ணாமலை குறிப்பிட்டார். தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. திமுக அரசு செய்த தவறுகளை தவெக அரசும் செய்து வருகிறது. சமூகவிரோதிகள் ஆளுங்கட்சியை கேடயமாக பயன்படுத்துவதை முதல்வர் தடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: தவெகவில் பதவி ஆசை காட்டி பலாத்காரம்.. கருவை கலைத்து கொலை மிரட்டல்.. அரக்கோணம் ஒன்றிய செயலர் மீது புகார்!